மேலும் அறிய

TANCET 2023: முதுகலைப் படிப்புகள்; டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு

2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இதற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இதற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

டான்செட் தேர்வுகள்:

தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) எழுத வேண்டும். இளங்கலை கடைசி ஆண்டு மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம்.

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கு விண்ணப்பிக்க நேற்று (பிப்.22ஆம் தேதி) கடைசித் தேதி ஆக இருந்தது. இந்த நிலையில் மாணவர்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, விண்ணப்ப அவகாசம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

புது நுழைவுத் தேர்வு அறிமுகம்

இந்த ஆண்டில் இருந்து சிஇஇடிஏ எனப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (CEETA- COMMON ENGINEERING ENTRANCE TEST AND ADMISSIONS) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் B.E, B.Tech., Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. டான்செட் தேர்வுக்கும் சிஇஇடிஏ தேர்வுக்கும் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு மாணவர்கள் பிப்ரவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  மாணவர்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, விண்ணப்ப அவகாசம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. 

2022 டான்செட் தேர்வு

கடந்த ஆண்டு டான்செட் தேர்வு மே 14ஆம் தேதி நடைபெற்றது. குறிப்பாக எம்சிஏ படிப்பிற்கு மே 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற்றது. எம்பிஏ படிப்பிற்கு மே 14-ஆம் தேதி மதியம் 2:30 முதல் மாலை 4:30  மணி வரை தேர்வுகள் நடைபெற்றன. முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 15 அன்று நடைபெற்றது.

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ள https://tancet.annauniv.edu/tancet/Procedure%20%20for%20Online%20Registration%202023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

2023 டான்செட் தேர்வு தேதி

எம்பிஏ படிப்புகளுக்கான தேர்வு மார்ச் 25ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. எம்சிஏ படிப்புகளுக்கான தேர்வு மார்ச் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. 

CEETA தேர்வு 

எம்இ, எம்டெக், எம்ஆர்க் படிப்புகளுக்கு நடத்தப்பட உள்ள சிஇஇடிஏ தேர்வு அடுத்த நாள் அதாவது மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. குறிப்பாக காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது.  

கூடுதல் தகவல்களுக்கு: https://tancet.annauniv.edu/tancet

தொலைபேசி எண்கள்: 044-22358289 / 044-22358314 (10.00 AM to 6.00 PM)

மேலும் படிக்க: RTE: இலவச கட்டாயக் கல்வி மாணவர் சேர்க்கை - நிலுவை கட்டணத்தை உடனே வழங்க தனியார் பள்ளிகள் வலியுறுத்தல்

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Embed widget