மேலும் அறிய

TN TRB Exam: அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் தேர்வு திடீர் ரத்து; புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!

2708 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான புதிய அறிவிக்கை இன்று (16.10.2025) வெளியிடப்படுகிறது.

அரசு கல்லூரிகளில் பணியாற்ற 4000 பேராசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படுவதாக இருந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் திடீரென ரத்து செய்துள்ளது. புதிய தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  குறிப்பாக 2012- 13 முதல் 2016 - 17 வரை ஏராளமான காலியிடங்கள் தோன்றின. இதில் 4 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு வெளியிட்டது. 

இதில் உதவிப் பேராசிரியர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு லெவல் 10 அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக ரூ. 57,700 முதல் ரூ. 1,82,400 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த பணியிடங்களுக்கு வெளியிடப்பட்ட அறிவிக்கை திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசாணை நிலை எண்.230 மற்றும் 231, உயர் கல்வித்(F2) துறை, நாள்.06.10.2025-இன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 14.03.2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை எண். 02 / 2024 இரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (Website:https://www.trb.tn.gov.in) கல்லூரிகளுக்கான 2708 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான புதிய அறிவிக்கை எண்.04/2025 இன்று (16.10.2025) வெளியிடப்படுகிறது.

பாட வாரியான காலிப் பணியிட விவரங்கள். கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் மேலும், அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க (Online Application) 17.10.2025 5 10.11.2025 வழங்கப்பட்டுள்ளது. கால அவகாசம் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை எண்:12/2019, நாள்.28.08.2019 & 04.10.2019 மற்றும் அறிவிக்கை எண்: 02 / 2024, நாள்.14.03.2024இன்படி, விண்ணப்பித்த பணிநாடுநர்கள் இப்புதிய அறிவிக்கையின்கீழ் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

இவர்களுக்கு மட்டும் இப்புதிய விண்ணப்பத்திற்கான தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்தும் மற்றும் வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது’’.

இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!

Embed widget