மேலும் அறிய

TTSE 2024: அக்.19 தமிழ் திறனறித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?

தமிழ் மொழி இலக்கிய திறனறித்‌ தேர்வு அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளதாவது:

19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவிருக்கும்‌ தமிழ்மொழி இலக்கிய திறனறித்‌ தேர்விற்கே வருகை புரியும்‌ மாணவர்களின்‌ பெயர்பட்டியலுடன்‌ கூடிய வருகைத் தாள்‌ தேர்வு மையம்‌ வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம்‌ செய்து கொள்ள ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஒவ்வாரு தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள்‌ தவறாமல்‌ பெயர்‌ பட்டியலுடன்‌ கூடிய வருகைதாள்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ள அறிவுறுத்த வேண்டும்.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு:

மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுக்களை பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌/ முதல்வர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ தங்கள்‌ பள்ளிக்கான User ID /Password கொண்டு பதிவிறக்கம்‌ செய்துகொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

மேலும்‌, தமிழ்மொழி இலக்கிய திறனறித்‌ தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்‌/ முதல்வர்கள்‌ பதிவிறக்கம்‌ செய்து வழங்கவும்‌, தேர்வு மைய விவரத்தினை அம்மாணவர்களுக்கு தெரிவிக்கவும்‌ அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

அது என்ன தமிழ் திறனறிவுத் தேர்வு?

பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல்‌, கணிதம்‌, சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு அதிக அளவில்‌ தயாராகி, பங்கு பெற்று வருகின்றனர். அதைப்‌ போன்று தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனை மாணவர்கள்‌ மேம்படுத்திக்‌ கொள்ளும்‌ வகையில்‌ தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனறிவுத்‌ தேர்வு நடத்தப்படும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசு தெரிவித்தது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு முதல் தேர்வு

இதைத் தொடர்ந்து முதன்முதலாக‌ 2022- 2023ஆம்‌ கல்வியாண்டில்  அக்டோபர் 15ஆம் தேதி இலக்கியத்‌ திறனறிவுத்‌ தேர்வு நடத்தப்பட்டது. 2.67 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில், அதில் இருந்து  1,500 மாணவர்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளிக்‌ கல்வித்‌ துறை வழியாக மாதம்‌ ரூ.1500/- வீதம்‌ இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

School Teacher: பள்ளி ஆசிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! டிசம்பர் 11 கடைசி நாள்!
School Teacher: பள்ளி ஆசிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! டிசம்பர் 11 கடைசி நாள்!
"காலத்தையும் பணத்தையும் வீணடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்" - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
"வதந்திகளை நம்பாதீங்க மாணவர்களே" - அம்பேத்கர் உயர்கல்வி உதவித்தொகை குறித்த அரசின் முக்கிய அறிவிப்பு
School Student: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.1000 உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
School Student: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.1000 உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாகிஸ்தானை பந்தாடுமா இந்திய அணி! - இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு
பாகிஸ்தானை பந்தாடுமா இந்திய அணி! - இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
"பஞ்ச் டயலாக பேசி ஆட்சி நடத்தும் டம்மி முதல்வர்" - காவல் மரணங்கள் தொடர்வதாக எதிர்க்கட்சித்தலைவர் விமர்சனம்!
U19 IND vs PAK: அப்துல் காதர் காட்டடி.. உஸ்மான் கான் மொரட்டு செஞ்சுரி! பாகிஸ்தான் பலே பேட்டிங்! இறுதிப்போட்டியில் வெல்லுமா இந்தியா?
U19 IND vs PAK: அப்துல் காதர் காட்டடி.. உஸ்மான் கான் மொரட்டு செஞ்சுரி! பாகிஸ்தான் பலே பேட்டிங்! இறுதிப்போட்டியில் வெல்லுமா இந்தியா?
2027 ஜனவரியில் புதிய ரயில் சேவை? திருச்சியில் ரூ.60 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பணிமனை!
2027 ஜனவரியில் புதிய ரயில் சேவை? திருச்சியில் ரூ.60 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பணிமனை!
Tanishq கொள்ளை: மதுரை இளைஞர் துணி எரித்த சிசிடிவி! நகைகள் பதுக்கினாரா?
Tanishq கொள்ளை: மதுரை இளைஞர் துணி எரித்த சிசிடிவி! நகைகள் பதுக்கினாரா?
Embed widget