மேலும் அறிய

Tamil Pudhalvan Scheme: மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000, வருமான வரம்பு ஏதுமில்லை; தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?- விதிகள் இதோ!

வேறு ஏதேனும்‌ உதவித்‌ தொகை பெற்று வருபவராக இருப்பினும்‌, தமிழ்ப் புதல்வன் திட்டத்தில்‌ பயன்‌ பெற தகுதி உடையவராவர்‌.

2024-2025 ஆம்‌ நிதியாண்டு முதல்‌ 6 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்று மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளியில்‌ தமிழ்‌ வழியில்‌ பயின்று உயர்கல்வி பயிலும்‌ மாணவர்களுக்கு "புதுமைப்‌ பெண்‌ திட்டம்‌" போன்று மாதந்தோறும்‌ ரூ.1,000/- உதவித்‌ தொகை வழங்கும்‌ "தமிழ்ப்‌ புதல்வன்‌ திட்டம்‌" செயல்படுத்தப்பட உள்ளது. 

இதில் விண்ணப்பிக்க என்னென்ன அடிப்படைத் தகுதிகள்? பார்க்கலாம்.

  1. வருமான உச்ச வரம்பு, இனம்‌ மற்றும்‌ ஒதுக்கீடு ஆகிய எந்தவொரு பாகுபாடும்‌ இன்றி, 6 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்ற மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ தமிழ்‌ வழியில்‌ பயின்ற மாணவர்கள்‌, தமிழகத்தில்‌ உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும்‌ உயர்கல்வி பயிலும்‌ மாணவராக இருத்தல்‌ வேண்டும்‌. 

மேலும்‌, மாணவர்‌ பயிலும்‌ நிறுவனம்‌ மற்றும்‌ பாடப்பிரிவு அரசால்‌ அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல்‌ வேண்டும்‌.

 

  1. அரசுப்‌ பள்ளிகளிலும்‌ மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ தமிழ்‌ வழியில்‌ 8 ஆம்‌ வகுப்பு அல்லது 9 ஆம்‌ வகுப்பு அல்லது 10 ஆம்‌ வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில்‌ பயிலும்‌ மாணவர்களும்‌ இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயனடைய தகுதி உடையவர்கள்‌ ஆகிறார்கள்‌.

 

  1. தமிழ்நாடு அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை பட்டம்‌, தொழிற்சார்‌ படிப்புகளில்‌ சேர்க்கையில்‌ முன்னுரிமை வழங்குதல்‌ சட்டம்‌, 2021ல்‌ குறிப்பிட்டுள்ளவாறு "அரசுப்‌ பள்ளி" என்பது அரசுப்‌ பள்ளிகள்‌, மாநகராட்சிப்‌ பள்ளிகள்‌, நகராட்சிப்‌ பள்ளிகள்‌, ஊராட்சி ஒன்றியப்‌ பள்ளிகள்‌, ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்‌ துறை பள்ளிகள்‌, கள்ளர்‌ மறுவாழ்வு பள்ளிகள்‌, வனத்‌ துறை பள்ளிகள்‌ மற்றும்‌ கல்விக்கான அடிப்படை உரிமைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ கல்வி பெறும்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறையால்‌ நடத்தப்படும்‌ அரசு சேவை இல்லங்கள்‌ / அரசு குழந்தைகள்‌ காப்பகங்கள்‌ போன்றவற்றை உள்ளடக்கியது.

 

  1. உயர்கல்வி என்பது கலை மற்றும்‌ அறிவியல்‌, தொழிற்சார்‌ படிப்புகள்‌, இணை மருத்துவம்‌ சார்ந்த படிப்புகள்‌, பட்டயப்‌ படிப்பு, தொழிற்கல்வி மற்றும்‌ ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு போன்றவற்றை உள்ளடக்கியது.

 

  1. தொலைதூர / அஞ்சல்‌ வழியிலும்‌, அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும்‌ உயர்கல்வி பயிலும்‌ மாணவர்கள்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ ஊக்கத்தொகையை பெற இயலாது.

வேறு உதவித்தொகை பெற்றாலும் விண்ணப்பிக்கலாம்

  1. வேறு ஏதேனும்‌ உதவித்‌ தொகை பெற்று வருபவராக இருப்பினும்‌, இத்திட்டத்தில்‌ பயன்‌ பெற தகுதி உடையவராவர்‌.

 

  1. மற்ற மாநில பள்ளிகளில்‌ பயின்ற மாணவர்கள்‌ இத்திட்டத்தில்‌ பயனடைய தகுதி அற்றவர்களாவர்‌.

ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்‌.

  1. ஒரே குடும்பத்தில் இருந்து எத்தனை மாணவர்கள்‌ தகுதி பெற்றிருப்பினும்‌, அனைவரும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயனடைய விண்ணப்பிக்கலாம்‌.
  1. பள்ளிப்‌ படிப்பிற்கு பின்னர்‌, உயர்கல்வி பயின்று வரும்‌ மாணவர்கள்‌ மட்டுமே இத்திட்டத்தில்‌ பயன்‌பெறத் தகுதி உடையவராவர்‌. ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவில்‌ (Integrated courses) பயிலும்‌ மாணவர்களுக்கு மட்டும்‌ முதல்‌ மூன்று ஆண்டுகள்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ ஊக்கத்‌ தொகையினை பெற இயலும்‌.

 

  1. பருவத்‌ தேர்வு / வருடத்‌ தேர்வினை எழுத அனுமதிக்கப்படும்‌ மாணவர்கள்‌ இந்த உதவித்‌ தொகை பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்‌.

 

  1. பிற மாநிலங்களில்‌ மத்திய அரசின்‌ கீழ்‌ செயல்படும்‌ IIT, NIT, IISER போன்ற தகைசால்‌ கல்வி நிறுவனங்களில்‌ பயிலும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்ற மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ தமிழ்வழிக்‌ கல்வியில்‌ பயின்ற மாணவர்களும்‌ இத்திட்டத்தில்‌ பயன்பெறுவர்‌. இவர்கள்‌ மாநிலத் திட்ட மேலாண்மை அலகின்‌ மூலமாக அணுக வேண்டும்‌.

 

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
Student admissions in colleges : மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
ITI படிக்க ஆசையா? ரூ.20,000 சம்பளத்தில் வேலை உறுதி! – விழுப்புரம் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!
ITI படிக்க ஆசையா? ரூ.20,000 சம்பளத்தில் வேலை உறுதி! – விழுப்புரம் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Minister Sarathkumar: ‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
EV Vs CNG Value: EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
Upcoming Honda Cars: ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
நியாயமா சிஎம் சார்? ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி!
நியாயமா சிஎம் சார்? ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி!
Embed widget