மேலும் அறிய

MBBS, BDS Counselling: ஆன்லைனில் தொடங்கியது எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு  இடக் கலந்தாய்வு இன்று (அக்டோபர் 11-ம் தேதி) கலந்தாய்வு தொடங்கி உள்ளது. 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு  இடக் கலந்தாய்வு இன்று (அக்டோபர் 11-ம் தேதி) கலந்தாய்வு தொடங்கி உள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆயிரத்து 50 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்று விடும். மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும்.

இதற்கிடையே எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு tnhealth.tn.gov.in என்ற இணையதளத்திலும் tnmedicalselection.org என்ற இணையதளத்திலும் மாணவர்கள் விண்ணப்பித்தனர். குறிப்பாக மாணவர்கள் ஆன்லைனில் அக்டோபர் 6ஆம் தேதி வரை விண்ணப்பித்து வந்தனர்.

அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் 569 மாணவர்கள் மருத்துவம் படிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 7.5% ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், அதற்கான உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு  இடக் கலந்தாய்வு இன்று (அக்டோபர் 11-ம் தேதி) கலந்தாய்வு தொடங்கி உள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி வரை இதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் 28ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும். 

மத்தியக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. அக்டோபர் 20 வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள்  28ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும். மாநில இடங்களுக்கு அக்டோபர் 17-ல் கலந்தாய்வு தொடங்கி, 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் நவம்பர் 4ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும். 

இரண்டாம் கட்டக் கலந்தாய்வு எப்போது?

அகில இந்திய ஒதுக்கீடு  இடங்களுக்கு இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நவம்பர் 2-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. நவம்பர் 10ஆம் தேதி வரை இதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் 18ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும். 


MBBS, BDS Counselling: ஆன்லைனில் தொடங்கியது எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு

மத்தியக் கலந்தாய்வு

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நவம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 10 வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் 18ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும். 

மாநில இடங்களுக்கு நவம்பர் 7-ல் கலந்தாய்வு தொடங்கி, 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் நவம்பர் 21ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும். இதைத் தொடர்ந்து Mop up Round கலந்தாய்வும், Stray Vacancy கலந்தாய்வும் நடைபெறும் என்றும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. 

முதலாம் ஆண்டு வகுப்புகள்

அதேபோல நவம்பர் 15-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என்றும் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. சிறப்பு பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடுகளுக்கு மட்டும் ஆப்லைனில் கலந்தாய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
"TET தேர்வு அறையில் கலெக்டர் ஸ்ரீகாந்த்: மயிலாடுதுறையில் இன்று நடந்தது என்ன?"
புதுச்சேரி & காரைக்கால் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: 4-ஆம் வகுப்பு முதல் PG வரை விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரி & காரைக்கால் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: 4-ஆம் வகுப்பு முதல் PG வரை விண்ணப்பிக்கலாம்!
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Crime: திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
Kia 7 Seater Hybrid: 7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
Embed widget