மேலும் அறிய

TN RTE Admission 2026:தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை; தொடங்கிய ஆர்டிஇ பதிவு- விண்ணப்பிப்பது எப்படி?

Tamil Nadu RTE 2026 Admission: தனியார் பள்ளிகளில் இலவசமாகப் படிப்பதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி உள்ளது. மாணவர்கள் இதற்கு ஒரு மாத காலத்துக்கு அதாவது மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

ஆர்டிஇ எனப்படும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act) -இன் கீழ் 2026- 27ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் இன்று (ஏப்ரல் 20) தொடங்கி உள்ளது. விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்த பெற்றோர்கள் இதற்கு மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு கொண்டு வந்த ஆர்டிஇ சட்டத்தின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்துச் சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதிப் பள்ளிகளில் இந்த இட ஒதுக்கீடு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு செலவாகும் தொகையை, அரசே தனியார் பள்ளிகளுக்குச் செலுத்தி விடும். 

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிதிப் பங்களிப்பில் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் இலவசமாகப் படிப்பதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி உள்ளது. மாணவர்கள் இதற்கு ஒரு மாத காலத்துக்கு அதாவது மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

இதற்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

1. மாணவரின் புகைப்படம் (150 px X 175 px)

2. பிறப்புச் சான்றிதழ்

3. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் / ரேஷன் அட்டை

4. நலிந்த பிரிவினருக்கான வருமானச் சான்றிதழ்

5. பின்தங்கிய பிரிவினருக்கான சாதிச் சான்றிதழ்

6. பின்தங்கிய பிரிவினருக்கான சிறப்புப் பிரிவுச் சான்றிதழ்

விண்ணப்பிப்பது எப்படி?

பெற்றோர்கள் https://rteadmission.tnschools.gov.in/reg-personal என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் கேட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.

வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் https://rteadmission.tnschools.gov.in/assets/data/RTE%20APPLICATION%20FORM_2024_25.pdf என்ற யூசர் மேனுவலைப் படித்து அறியலாம். இதில் விண்ணப்பிப்பது எப்படி என்ற விவரங்கள் படிப்படியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல https://rteadmission.tnschools.gov.in/rte-schoollist என்ற இணைப்பில் 38 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் தங்கள் இருப்பிடத்துக்கு அருகாமையில், அதாவது 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள பள்ளியைத் தேர்வு செய்து பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம். 

சந்தேகங்களுக்கு:

தொலைபேசி எண்: 14417

இ மெயில் முகவரி: rtetnqueries@gmail.com

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வெயில் இருந்தும் நிழல் இல்லை! புதுச்சேரியில் நடந்த வானியல் அதிசயத்தை நேரில் பார்த்த மாணவர்கள்!
வெயில் இருந்தும் நிழல் இல்லை! புதுச்சேரியில் நடந்த வானியல் அதிசயத்தை நேரில் பார்த்த மாணவர்கள்!
Holiday : மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 25, 26 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Holiday : மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 25, 26 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை: ஏஐசிடிஇயின் ஸ்வநாத் திட்டம்
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை: ஏஐசிடிஇயின் ஸ்வநாத் திட்டம்
நீட், நெட் சர்ச்சைகள்: கடுமையாகும் தேர்வு முறை- என்டிஏ நிபுணர்கள் குழு மறுசீரமைப்பு!
நீட், நெட் சர்ச்சைகள்: கடுமையாகும் தேர்வு முறை- என்டிஏ நிபுணர்கள் குழு மறுசீரமைப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC: இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
Udhayanidhi Stalin: சூடு சொரணை இருக்கும்ன்னு நினைச்சேன்.. முதல்வர் விஜய் பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. குவியும் கண்டனம்!
Udhayanidhi Stalin: சூடு சொரணை இருக்கும்ன்னு நினைச்சேன்.. முதல்வர் விஜய் பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. குவியும் கண்டனம்!
Udhaynidhi Stalin: கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு
கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு
TN Weather News: இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
Gold and silver rate today : அப்பாடா.! ரூ.10,000 குறைந்தது- தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ..
அப்பாடா.! ரூ.10,000 குறைந்தது- தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ..
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Embed widget