+2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த பழனி மாணவி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
600க்கு 599 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த பழனியை சேர்ந்த மாணவிக்கு தொலைபேசி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வாழ்த்து.
பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 600 க்கு 599 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த பழனியை சேர்ந்த மாணவிக்கு தொலைபேசி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே நேற்றே வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் +2 தேர்வு எழுதியவர்கள் 20,725. அதில் மாணவர்கள் 9,716 பேர், மாணவிகள் 11,009. இந்த தேர்வில் 19,668 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியதில் மொத்தம் 94.90% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களும், 92.70% பேரும், மாணவிகளும் 96.84% தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 94.90% தேர்ச்சி பெற்று தமிழக அளவில் 20வது திண்டுக்கல் மாவட்டம் இடத்தில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாரதி வித்யா பவன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஓவியா பிளஸ் 2 தேர்வில் 600க்கு 599 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆங்கிலப் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண் பெற்றுள்ளது மற்ற அனைத்து பாடப்பிரிவிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளது. TAMIL, COMMERCE, ACCOUNTANCY, COMPUTER APPLICATION, ECONOMICS, அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளார்.
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த ஓவியாஞ்சலிக்கு பல்வேறு தரப்பினர்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நெய்க்காரப்பட்டியில் உள்ள இவரது வீட்டிற்கு நேரில் சென்ற பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் பொன்னாடை போர்த்தி புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அலைபேசி மூலம் மாணவி ஓவியாஞ்சலிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
அப்பொழுது மாணவியின் உயர் கல்வி குறித்து கேட்டறிந்த முதலமைச்சரிடம் ரிசர்வ் பேங்க் இந்தியாவின் கவர்னராக விருப்பமுள்ளதாக மாணவி தெரிவித்ததை கேட்ட முதலமைச்சர் வியப்படைந்து மாணவிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் தனக்கு அலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தது தனக்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக மாணவி தெரிவித்தார். அதே போல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவிக்கு அலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.





















