மேலும் அறிய

10th Original Marksheet: தொடங்கிய 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்; பெறுவது எப்படி?

Tamil Nadu 10th Original Marksheet 2024: மதிப்பெண்கள் மாறிய மாணவர்களுக்கும், பிற மாணவர்களுக்கும் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது.

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று (ஆகஸ்ட் 29ஆம் தேதி) முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

மாநிலக் கல்வி வாரியத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் எழுதினர். இந்த மாணவர்களுக்கான பொதுத்‌ தேர்வு முடிவுகள்‌ மே 10ஆம் தேதி வெளியிடப்பட்டன.

அவர்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள் மற்றும் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். அதாவது மொத்தம் 91.55% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். கடந்த ஆண்டை காட்டிலும், இந்த முறை 0.16% கூடுதலாக தேர்ச்சி விகிதம் பதிவாகி இருந்தது.

மே மாதம் வழங்கப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

இதற்கிடையே மாணவர்கள் 13.05.2024 ‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களைப் பெற்றனர். மாணவர்கள்‌ தங்களது பிறந்த தேதி, பதிவண்‌ ஆகிய விவரங்களை அளித்து, இணைய தளத்தில்‌ தாங்களே பதிவிறக்கம்‌ செய்து கொண்டனர்.

தொடர்ந்து விடைத்தாள் மறுகூட்டல், மறு மதிப்பீடு நடந்தது. அதற்குப் பிறகு மதிப்பெண்கள் மாறிய மாணவர்களுக்கும், பிற மாணவர்களுக்கும் இன்று (ஆகஸ்ட் 29ஆம் தேதி) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பெறுவது எப்படி?

மாணவர்கள், அந்தந்தப் பள்ளிகளிலேயே மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம். தலைமை ஆசிரியர்கள் மூலம் இந்த சான்றிதழ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தனித் தேர்வர்களுக்கு என்ன நடைமுறை?

அதேபோல தனித் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெறலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
TN Govt: வாகன ஃபேன்சி எண்ணிற்கான கட்டணம் உயர்வு - கட்டட அனுமதிக்கான கட்டணமும் எகிறப்போகுது..!
வாகன ஃபேன்சி எண்ணிற்கான கட்டணம் உயர்வு - கட்டட அனுமதிக்கான கட்டணமும் எகிறப்போகுது..!
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? - வானிலை அறிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
Embed widget