மேலும் அறிய

SLET Exam: கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு நடத்தப்படுமா...? உயர்கல்வித்துறை தரப்பில் விளக்கம்..!

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு (SLET) ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

SLET Exam: கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

SLET தேர்வு

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் (NET) தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு நடத்தும் நெட் தேர்வு ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் சார்பில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டில் சுமார் 5 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கிறது. இதனால் உயர்கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வந்தது. ஆனால், மற்ற மாநிலங்களில் மாநில அரசின் தகுதித் தேர்வு தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. 

5 ஆண்டுகள் 

பல்கலைக்கழகம், கல்லூரி போன்றவற்றில் உதவி பேராசிரியர் பணிக்கு PH.D அல்லது NET தேர்வு முடித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய  அரசின் யுஜிசி சார்பில் நடத்தப்படும் நெட்  தேர்வு சற்று கடினமாக இருக்கும் காரணத்தினால் மாநில அரசு நடத்தும் தகுதித் தேர்வை பெரும்பாலானோர் எழுதிக் கொண்டிருந்தனர். மற்ற மாநிலங்களில் SLET தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 5 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கிறது.

காரணம்

2018ஆம்  ஆண்டு கடைசியாக கொடைக்கானல் தெரசா பல்கலைக்கழகத்தின் சார்பில் SLET தேர்வை தமிழக அரசு நடத்தியது. அதன்பின் 5 ஆண்டுகளாக நடத்தவில்லை. 2018ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு மாநில தகுதி தேர்வை நடத்துவதற்கான அனுமதியை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது. ஆனால் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த தேர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், சுமார் 5 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதனால் மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தது. 

உயர்கல்வித்துறை தரப்பில் பதில்

இந்நிலையில், SLET தேர்வு நடத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை சார்பில் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ”கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு (SLET) ஆண்டுதோறும் நடத்தப்படும் என்றும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திடம் தேர்வு நடத்துவதற்கான அனுமதி தரப்படும்" என்றும் உயர்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

மேலும், ”நீதிமன்றத்தில் வழக்கு முடியும் நிலையில் இருக்கிறது. எனவே ஆண்டுதோறும் SLET தேர்வு நடத்தப்படும். முதலில் 4 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வு உடனடியாக நடத்தப்படும்"  என்று  தகவல் வெளியாகி இருக்கிறது. 

மேலும் படிக்க 

Naan Mudhalvan Scheme: நான் முதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல்: பள்ளிக்கு ஓர் ஆசிரியருக்கு பயிற்சி

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget