மேலும் அறிய

சிவகங்கை மக்களே இந்த விடயம் தெரியாம வீட்டிலேயே இருந்துராதீங்க... ரூ.59 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.!

நடப்பு நிதியாண்டில் சுமார் 5,000 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதற்காக ரூ.59 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கல்லூரி பயிலும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், வருகின்ற 22.09.2026 முதல் 08.10.2026 வரை, மாவட்டத்தின் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் (BDO Offices) சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெறவுள்ளது.

சிறப்பு கல்விக்கடன் முகாம்
 
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் இம்முகாம், மாவட்டத்தின் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் (BDO Offices)  22.09.2026 முதல் 08.10.2026 வரை நடைபெற உள்ளது.
                  
முகாம் விவரங்கள்:
 
வ. எண், ஒன்றியத்தின் பெயர் (Block Name), தேதி, கிழமைகள், இடம் (Venue),  நேரம்
 
1. சாக்கோட்டை & கல்லல் 22.09.26 அன்று -  செவ்வாய்க்கிழமை - பூமாலை வணிக வளாகம், புதிய பேருந்து நிலையம் அருகில், காரைக்குடி  முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை.
 
2. திருப்புவனம் 23.09.26 புதன்கிழமை திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO Office) முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை.
 
3. சிங்கம்புணரி & எஸ்.புதூர் 24.09.26 வியாழக்கிழமை சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO Office) 
முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை
 
4. தேவகோட்டை & கண்ணங்குடி 25.09.26 வெள்ளிக்கிழமை தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO Office)
முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை
 
5. திருப்பத்தூர் 28.09.26 திங்கள்கிழமை திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO Office) முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை
 
6.இளையான்குடி 01.10.26 வியாழக்கிழமை இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO Office) முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை
 
7.மானாமதுரை 06.10.26 செவ்வாய்க்கிழமை மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO Office)
முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை
 
8.சிவகங்கை & காளையார்கோவில் 08.10.26 வியாழக்கிழமை மாவட்ட வளர்ச்சி மன்ற அரங்கம் (DDC Hall), மாவட்ட ஆட்சியரகம்
முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை.
 
ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.
 
நடப்பு நிதியாண்டில் சுமார் 5,000 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதற்காக ரூ.59 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். எனவே, இக்கல்வி கடன் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், கல்லூரி சேர்க்கை ஆணை, கலந்தாய்வு ஒதுக்கீட்டு ஆணை, கல்லூரியின் உண்மைத்தன்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) மற்றும் கட்டண விவரப் பட்டியல்,  ஆதார் அட்டை மற்றும் PAN அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.
 
ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.
 
மேலும், பெற்றோர், இணைக் கடனாளரின் ஆவணங்களாக ஆதார் அட்டை மற்றும் PAN அட்டை, வருமானச் சான்றிதழ் அல்லது சம்பளச் சீட்டு, படிவம்-16 (சம்பளம் பெறுபவர்களுக்கு) , கடந்த 6 மாதங்களுக்கான வங்கிக் கணக்கு அறிக்கை, சமீபத்திய மின்சாரக் கட்டண ரசீது அல்லது குடும்ப அட்டை (முகவரிச் சான்றாக) ,பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் , சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் அனைத்து வங்கிகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டு, கல்விக்கடன் தொடர்பான தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்க உள்ளனர். கல்விக்கடன் முகாம்களை நடத்த விரும்பும் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை (Lead Bank Office, Indian Overseas Bank, Sivagangai) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
Tamil Nadu School Holiday Today: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! எந்தெந்த மாவட்டங்களுக்கு லீவு? முழு விவரம் இதோ!
Tamil Nadu School Holiday Today: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! எந்தெந்த மாவட்டங்களுக்கு லீவு? முழு விவரம் இதோ!
School Holiday Today | விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
School Holiday Today | விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
School holidays: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
School holidays: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
Embed widget