மேலும் அறிய

TN Scholarship: ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர்களின் குழந்தைகள்:

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

’’தமிழ்நாடு தேசிய ஆசிரியர்‌ நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும்‌ ஆசிரியர்களின்‌ பிள்ளைகளுக்கு 2022-2023ஆம்‌ கல்வி ஆண்டிற்கு படிப்புதவித்‌ தொகை வழங்க விண்ணப்பங்கள்‌ பூர்த்தி செய்து அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும்‌ தங்கள்‌ ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும்‌ அரசு உதவிப்பெறும்‌ பள்ளிகளுக்கும்‌ உடனடியாக சுற்றறிக்கை மூலம்‌ அறிவித்து படிப்புதவித்‌ தொகை பெற விரும்பும்‌ ஆசிரியர்கள்‌ 31.12.2022க்குள்‌, ஆணையர்‌, பள்ளிக்கல்வி, டி.பி.ஐ வளாகம்‌, கல்லூரிச்‌ சாலை, சென்னை-06 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

இந்த தொழிற்கல்வி படிப்புதவித்‌ தொகை குறித்து அலுவலக தகவல்‌ பலகையில்‌ விரிவான விளம்பரம்‌ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்களை அனுப்பும்போது கீழ்க்கண்ட குறிப்புகளைக்‌ கண்டிப்பாக கவனத்தில்‌ கொள்ளவேண்டும்‌ என ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும்‌ அறிவுறுத்தப்படுகிறது.

1. விண்ணப்பிக்கும்‌ ஆசிரியர்களின்‌ மகன்‌/மகள்‌ அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ உள்ள நிறுவனத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட நான்கு ஆண்டு தொழிற்கல்வி பட்டப்படிப்பு மற்றும்‌ மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு படிப்பவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ கல்வி உதவித்‌ தொகை கோரவிருக்கும்‌ ஆசிரியர்கள்‌ குறைந்தபட்சம்‌ பத்தாண்டுகள்‌ பணியினை முழுமையாக முடித்திருக்க வேண்டும்‌.

2. இதற்கு முந்தைய அனைத்து தேர்வுகளிலும்‌ தேர்ச்சி பெற்றவர்கள்‌ மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌. (சான்றளிக்கப்பட்ட மதிப்பெண்‌ சான்றிதழ்‌ நகல்‌ இணைத்தல்‌ வேண்டும்‌.) 

3. மனுவில்‌ உள்ள அனைத்து கலங்களும்‌ முழுமையான அளவில்‌ சரியாக தமிழில்‌ பூர்த்தி செய்திருத்தல்‌ வேண்டும்‌. சரியாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (பணிபுரியும்‌ பள்ளி, முகவரி பின்‌கோடுடன்‌ இருத்தல்‌ வேண்டும்‌)

4. பெற்றோர்களின்‌ ஆண்டு வருமானம்‌ ரூ.7,20,000/-க்குள் (அடிப்படை ஊதியம்‌ மட்டும்‌)‌ இருத்தல்‌ வேண்டும்‌.

5. இந்த ஆண்டு முதல்‌ தொழிற்கல்வி பட்டப்‌ படிப்பிற்கு ரூ.10,000/-ம்‌ தொழிற்கல்வி பட்டயப்‌ படிப்பிற்கு ரூ.5,000 /-ம்‌ கல்வி உதவித்‌ தொகையாக வழங்கப்படும்‌.

TN Scholarship: ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..

6. விண்ணப்பங்கள்‌ பள்ளிக்கல்வி ஆணையர்‌ அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.12.2022.‌ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆசிரியர்கள்‌ நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல்‌ மூலமாகவோ ஆணையர்‌, பள்ளிக்கல்வி, கல்லூரிச்‌ சாலை, சென்னை-0௦6 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

7. தொழிற்கல்வி படிப்பில்‌ கடைசியாக எழுதிய தேர்வில்‌ தேர்ச்சி பெற்றமைக்கு ஆதாரமான மதிப்பெண்‌ சான்றிதழ்‌ நகல்கள்‌ இன்றி பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌.

8. தந்‌தை அல்லது தாய்‌ பணியின்‌ விவரம்‌ மற்றும்‌ அவர்களின்‌ ஊதியச்‌ சான்று விவரங்களைக்‌ கண்டிப்பாக விண்ணப்பத்தில்‌ உள்ள கலத்தில்‌ பூர்த்தி செய்திருக்க வேண்டும்‌.

9. தந்தை அல்லது தாய்‌ ஆசிரியராக பணிபுரிந்தால்‌ மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌.

10. ஆசிரியரல்லாத பணியாளர்கள்‌ விண்ணப்பிக்கக்கூடாது.

11. ஓய்வுபெற்ற ஆசிரியர்களின்‌ பிள்ளைகள்‌ மற்றும்‌ இறந்து போன ஆசிரியர்களின்‌ பிள்ளைகள்‌ ஆகியோர்களும்‌ இப்படிப்புதவித்‌ தொகை பெற தகுதியுள்ளவர்கள்‌ ஆவார்கள்‌. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ விண்ணப்பிக்க கடைசித் தேதியான 31.12.2022க்குப்பின்‌ கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது’’.

இவ்வாறு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget