மேலும் அறிய

Scholarship: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை 2 மடங்கு உயர்வு: தமிழக அரசு உத்தரவு- விவரம்!

பள்ளிகளிலும்‌, கல்லூரிகளிலும்‌ பயிலும்‌ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும்‌ கல்வி உதவித்‌ தொகையை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்‌.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக ரூ.14,90,52,000 அனுமதித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு தெரிவித்து உள்ளதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌, மாற்றுத்‌ திறனாளிகளுக்கு அரசுப்‌ பேருந்துகளில்‌ கட்டணமில்லாப்‌ பயணச்‌ சலுகை, மாற்றுத்‌ திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித்‌ தொகை ரூ.1,000 என்பதை ரூ.1,500ஆகவும்‌ உயர்த்தி வழங்கினார்‌. அத்துடன்‌, தற்போது, பள்ளிகளிலும்‌, கல்லூரிகளிலும்‌ பயிலும்‌ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும்‌ கல்வி உதவித்‌ தொகையையும்‌ உயர்த்தி அவர்கள்‌ ஊக்கமுடன்‌ கல்வி கற்க உதவி செய்துள்ளார்‌.

அதாவது, பள்ளிகளில்‌ படிக்கும்‌ மாணவ, மாணவியர்களில்‌ 1 முதல்‌ 5ஆம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும்‌ கல்வி உதவித்‌ தொகை ஆண்டுக்கு 1,000 ரூபாய்‌ என்பதைஇரு மடங்காக உயர்த்தி 2,000 ரூபாய்‌ என்றும்‌ 6-ஆம்‌ வகுப்பு முதல்‌ 8-ஆம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும்‌ கல்வி உதவித்‌ தொகை ஆண்டுக்கு 3,000 ரூபாய்‌ என்பதை இரு மடங்காக உயர்த்தி 6,000 ரூபாய்‌ என்றும்‌; 9-ஆம்‌ வகுப்பு முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும்‌ கல்வி உதவித்‌ தொகை ஆண்டுக்கு 4,000 ரூபாய்‌ என்பதை இரு மடங்காக உயர்த்தி 8,000 ரூபாய்‌ என்றும்‌ உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்‌.

பட்டப் படிப்புக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகை

அதேபோல, கல்லூரிகளில்‌ பட்டப்‌ படிப்பு படிக்கும்‌ மாற்றுத்‌ திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும்‌ வழங்கப்படும்‌ கல்வி உதவித்‌ தொகை 6 ஆயிரம்‌ ரூபாய்‌ என்பதை 12 ஆயிரம்‌ ரூபாய்‌ என இருமடங்காக உயர்த்தி வழங்கிடவும்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.

பட்ட மேற்படிப்புக்கு ரூ.14 ஆயிரம்

மேலும்‌, தொழிற்கல்லூரிகளிலும்‌, பட்ட மேல்படிப்புகளிலும்‌ படிக்கின்ற மாற்றுத்‌ திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும்‌ வழங்கப்படும்‌ கல்வி உதவித்‌ தொகை 7 ஆயிரம்‌ ரூபாய்‌ என்பதை 14 ஆயிரம்‌ ரூபாயாக இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும்‌ ஆணையிட்டுள்ளார்கள்.‌ இதற்காக 14 கோடியே 90 இலட்சத்து 52 ஆயிரம்‌ ரூபாயை அனுமதித்து 10.9.2024 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்கள்‌.

ஆராய்ச்சிப் படிப்புக்கு ரூ.1 லட்சம்

பள்ளி, கல்லூரி படிப்புகளுடன்‌, மாற்றுத்‌ திறனாளி மாணவ-  மாணவியர்கள்‌ படிப்பை நிறுத்திவிடக்‌ கூடாது என்பதற்காக அவர்கள்‌ ஆராய்ச்சிப்‌ படிப்புகளிலும்‌ ஈடுபட வேண்டும்‌ என்னும்‌ விழைவோடு ஆராய்ச்சிப்‌
படிப்பில்‌ சேரும்‌ மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஊக்கமளிப்பதற்காக அவர்களுக்கு முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி உதவித்‌ தொகை திட்டத்தின்கீழ்‌ தலா 1 லட்‌சம்‌ ரூபாய்‌ வீதம்‌ 50 மாற்றுதிறனாளிகள்‌ பயன்புபறும்‌ வகையில்‌ 50 இலட்சம்‌ ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

பி.ஆர்க். (B.Arch) படிப்பிற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு - முழு விவரம் உள்ளே!
பி.ஆர்க். (B.Arch) படிப்பிற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு - முழு விவரம் உள்ளே!
டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Onam special train : ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
Embed widget