மேலும் அறிய

தொடங்கியது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முன்பதிவு; எப்படி விண்ணப்பிக்கலாம்? எப்போது தேர்வு?

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 7 கடைசித் தேதி என்ற நிலையில், இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க மே 7 கடைசித் தேதி ஆகும். 

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு (மெயின்ஸ்), முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) என்று 2 கட்டங்களாகப் பிரித்து நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதியானவர்கள். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் இடம் ஒதுக்கப்படுகிறது. 

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. இவை தாண்டிய பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப, ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு நேற்று (ஏப்ரல் 27) தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க மே 7ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். அன்று இரவு 11.30 மணி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மே 10ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

தேர்வு எப்போது?

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு மே 26ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் தாள் காலை 9 முதல் 12 மணி வரையும் இரண்டாவது தாள் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

தற்காலிக விடைக்குறிப்புகள் ஜூன் 2ஆம் தேதி வெளியாக உள்ளன. மாணவர்களின்  ஆட்சேபனைகளுக்குப் பிறகு, ஜூன் 9ஆம் தேதி இறுதி விடைக் குறிப்புகள் வெளியாக உள்ளன. அதேநாளில் தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளன.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் jeeadv.ac.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை மே 17 முதல் 26ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு நடைபெறும் நாளான மே 26ஆம் தேதி வரை ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம். 

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

இந்தத் தேர்வுக்கு ரூ.3,200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் இதில் பாதி மட்டும் செலுத்தினால் போதும். அதாவது ரூ.1,600 தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த பெண் தேர்வர்களும் ரூ.1,600 செலுத்தினால் போதும். 

வெளிநாட்டு மாணவர்கள், சார்க் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால், 100 டாலர்களும் சார்க் அல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால், 200 டாலர்களும் தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

https://jeeadv.nic.in/Applicant/Public/DirectRegFeeVerification என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் விண்ணப்பிக்க: https://jeeadv.nic.in/applicant என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். தேவையான தகவல்களை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! மாதாமாதம் ரூ.1000: எப்போது?
தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! மாதாமாதம் ரூ.1000: எப்போது?
Breaking Tamil LIVE: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எலும்பு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
Breaking Tamil LIVE: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எலும்பு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
Silambarasan TR: கமலுடன் களமிறங்கிய சிலம்பரசன்.. தெறிக்க விடும் “தக் லைஃப்” படத்தின் புது போஸ்டர்!
Silambarasan TR: கமலுடன் களமிறங்கிய சிலம்பரசன்.. தெறிக்க விடும் “தக் லைஃப்” படத்தின் புது போஸ்டர்!
West Nile virus: கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல்.. தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறை தீவிரம்
கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல்.. தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறை தீவிரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Chennais Amirta Aviation : Hotel Management-ஐ தொடர்ந்து விமானக் கல்லூரி! சென்னைஸ் அமிர்தா அசத்தல்K V Thangabalu : ”பணம் வாங்கினேனா? ஜெயக்குமார் சொன்னது பொய்” கே.வி.தங்கபாலுVeeralakshmi Slams Savukku Shankar : MS Dhoni injury : தோனிக்கு என்ன ஆச்சு? CSK-ல் நடப்பது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! மாதாமாதம் ரூ.1000: எப்போது?
தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! மாதாமாதம் ரூ.1000: எப்போது?
Breaking Tamil LIVE: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எலும்பு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
Breaking Tamil LIVE: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எலும்பு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
Silambarasan TR: கமலுடன் களமிறங்கிய சிலம்பரசன்.. தெறிக்க விடும் “தக் லைஃப்” படத்தின் புது போஸ்டர்!
Silambarasan TR: கமலுடன் களமிறங்கிய சிலம்பரசன்.. தெறிக்க விடும் “தக் லைஃப்” படத்தின் புது போஸ்டர்!
West Nile virus: கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல்.. தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறை தீவிரம்
கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல்.. தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறை தீவிரம்
Ameer: நீட் தேர்வு எழுத சென்று எழுதாமல் திரும்பி வந்த அமீரின் மகள்..! நடந்தது என்ன தெரியுமா?
நீட் தேர்வு எழுத சென்று எழுதாமல் திரும்பி வந்த அமீரின் மகள்..! நடந்தது என்ன தெரியுமா?
Lok Sabha Phase 4 Polling: அடுத்த மூவ் நான்காம் கட்ட வாக்குப்பதிவு: ஆந்திராவில் ரோடு ஷோவுக்கு தயாராகும் மோடி!
Lok Sabha Phase 4 Polling: அடுத்த மூவ் நான்காம் கட்ட வாக்குப்பதிவு: ஆந்திராவில் ரோடு ஷோவுக்கு தயாராகும் மோடி!
Google Pixel 8a: பிரீமியம் AI தொழில்நுட்பத்துடன் கூகுள் பிக்சல் 8a செல்போன் இந்தியாவில் அறிமுகம் - அதுவும் இந்த விலைக்கா?
Google Pixel 8a: பிரீமியம் AI தொழில்நுட்பத்துடன் கூகுள் பிக்சல் 8a செல்போன் இந்தியாவில் அறிமுகம் - அதுவும் இந்த விலைக்கா?
AstraZeneca: அடுத்தடுத்து வந்த சிக்கல் - உலகம் முழுவதும் கோவிஷீல்ட் தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனிகா
AstraZeneca: அடுத்தடுத்து வந்த சிக்கல் - உலகம் முழுவதும் கோவிஷீல்ட் தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனிகா
Embed widget