மேலும் அறிய

Prof Anbazhagan Award: உங்கள் பள்ளி சிறந்த பள்ளியா? அப்போ பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு விண்ணப்பிங்க!

2023- 24ஆம் கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு, பேராசிரியர்‌ அன்பழகன் பெயரில்‌ விருது வழங்கப்படுவதை அடுத்து, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023- 24ஆம் கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு, பேராசிரியர்‌ அன்பழகன் பெயரில்‌ விருது வழங்கப்படுவதை அடுத்து, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன. 

கற்றல், கற்பித்தல், ஆசிரியர்‌ திறன்‌ மேம்பாடு, தலைமைத்துவம்‌, மாணவர்‌ வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும்‌ சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர்‌ அன்பழகன் பெயரில்‌ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பள்ளிக்கான பேராசிரியர்‌ அன்பழகன்‌ விருதிற்கு தகுதியான பள்ளியினை தெரிவு செய்து விருது வழங்குதல் சார்ந்து பின்வரும்‌ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன அளவுகோல்கள்?

* அரசுப்‌ பொதுத் தேர்வுகள்‌/ திறனறித்‌ தேர்வுகளில்‌ பள்ளி மாணவர்களின்‌ பங்களிப்பு,

* அன்றாட கற்றல்‌- கற்பித்தல்‌ நிகழ்வுகள்‌,

* வகுப்பறை கற்பித்தலில்‌ தொழில்நுட்பப்‌ பயன்பாடு,

* கல்வி இணைச் செயல்பாடுகள்‌ மற்றும்‌ கல்விசாரா செயல்பாடுகள்,‌

* மாணவர்களின்‌ ஒட்டுமொத்த  ஆளுமை வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்டு வரும்‌ நடவடிக்கைகள்,‌

* உயர் கல்வியில்‌ சேரும்‌ மாணவர்கள் எண்ணிக்கை,

* விளையாட்டுப்‌ போட்டிகள்‌,

* கலைத் திருவிழா,

* மன்ற செயல்பாடுகளில் மாணவர்களின்‌ பங்களிப்பு ஆகியவவற்றை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். 

அதேபோல பள்ளி வகுப்பறைகள்‌, மாணவர்களின்‌ கற்றலுக்கு ஏற்ற வகையில்‌ இருக்கை வசதி மற்றும்‌ தேவையான மின்‌ மற்றும் மின்னனணு சாதனங்களுடன்‌ கூடிய ஆய்வகங்கள்‌,

* வகுப்பறைகள்‌ உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள்‌,

* விளையாட்டு மைதானம்‌ மற்றும்‌ அவற்றின்‌ பயன்பாடு,

* போதுமான எண்ணிக்கையிலான கழிப்பறைகள்‌ மற்றும்‌ அவற்றின்‌ முறையான பராமரிப்பு,

* பள்ளி வளாக தூய்மை,

* மாணவர்கள்‌ உணவருந்த சுத்தமான குடிநீர்‌ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை,

* பள்ளியின்‌ பசுமைச்‌ சூழல்‌,

* பள்ளி காய்கறித்‌ தோட்டம்‌ மற்றும்‌ அதன்‌ பயன்பாடு,

* நூலக பயன்பாடு,

* ஆய்வக பயன்பாடு ஆகியவற்றையும்‌ மதிப்பிட்டு விருதுக்குரிய பள்ளியை தெரிவு செய்யலாம்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுக்கான குழு அமைத்தல்

சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர்‌ அன்பழகன் விருதுக்கான பரிந்துரைகளை வழங்கிட ஏதுவாக மாவட்ட/ மாநில அளவில்‌ பின்வரும்‌ தேர்வு குழுவினை அமைக்க வேண்டும் என்றும் அரசாணையில்‌ தெரிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் தேர்வுக் குழு விருதுக்கு தகுதியான பள்ளிகளை 1:2 என்ற விகிதத்தில்‌ தெரிவு செய்து மாநில மாவட்ட தேர்வு குழுவிற்கு பரிந்துரைக்கவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்வுக் குழு மற்றும்‌ மாவட்ட தேர்வுக்‌ குழுவின்‌ பரிந்துரை பள்ளிகளின்‌ ஒட்டுமொத்த செயல்பாட்டின்‌ அடிப்படையில்‌ பேராசிரியர்‌ அன்பழகன்‌ விருதுக்குரிய பள்ளிகளை மாவட்ட வாரியாக தெரிவு செய்ய வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாம்: Anbil Mahesh poyyamozhi: சுய விளம்பரத்துக்காக பதவியை பயன்படுத்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்? - ஆசிரியர் கூட்டணி சரமாரிக் கேள்வி!

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
Embed widget