மேலும் அறிய

President Droupadi Murmu: சென்னை பல்கலைக் கழகம் பாலின சமத்துவத்திற்கான கோயிலாக திகழ்கிறது - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழா சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 

சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழா சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.  மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 416 பட்டதாரிகளுக்கு பட்டங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இதில் 108 பட்டதாரிகளுக்கு பட்டங்களுடன், தங்கப்பதக்கங்களையும் வழங்கினார். 

அதன் பின்னர் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசுகையில் வணக்கம் சொல்லி தனது உரையைத் தொடங்கினார், ”பாலின சமத்துவத்திற்கான கோயிலாக சென்னை பல்கலைக் கழகம் விளங்குகிறது எனக் கூறினார். மேலும், சிறந்த தலைவர்களை சென்னை பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ராதாகிருஷ்ணன், அப்துல்கலாம், வெங்கட்ராமன், வி.வி. கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி உள்ளிட்ட மொத்தம் 6 ஜனாதிபதிகளை  சென்னை பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. சர்.சி.வி. ராமன், சந்திர சேகர் உள்ளிட்ட நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் இந்த பல்கலைக் கழகத்தில் தான் படித்தனர்” எனக் கூறியுள்ளார்.  

பாரதியார் பாடல்

மந்திரம் கற்போம்; வினைத் தந்திரம் கற்போம் வான அளப்போம் கடல் மீனை யளப்போம் சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்' அங்கேயே நின்றுவிடுவோமா? இல்லை. 'சந்தி, தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்” என பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பேசினார். 

மேலும் அவர், எந்தவொரு கவலையிலும் நீங்கள் மூழ்கிவிடக்கூடாது என்று அனைத்து மாணவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஒரு வாய்ப்பு எப்பொழுதும் இருக்கும், உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள். தேசம் மற்றும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கற்றல் அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சென்னை பல்கலைக்கழகம் முன்னணியில் இருக்க வேண்டும்.

பாலின சமத்துவம் - பெண் கல்வி

பாலின சமத்துவத்திற்கு சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பெண் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம், நம் நாட்டின் முன்னேற்றத்தில் முதலீடு செய்கிறோம் என பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசுகையில், இந்தியாவில் உள்ள தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்களில் தமிழ்நாட்டில் 21 பல்கலைக் கழகங்கள் உள்ளது என பேசினார். 

இந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
"TET தேர்வு அறையில் கலெக்டர் ஸ்ரீகாந்த்: மயிலாடுதுறையில் இன்று நடந்தது என்ன?"
புதுச்சேரி & காரைக்கால் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: 4-ஆம் வகுப்பு முதல் PG வரை விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரி & காரைக்கால் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: 4-ஆம் வகுப்பு முதல் PG வரை விண்ணப்பிக்கலாம்!
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
Kia 7 Seater Hybrid: 7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
TNEB Employees Allowance: மின் வாரிய ஊழியர்களுக்கு குஷி.! ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் அரசு-வெளியான முக்கிய அறிவிப்பு
மின் வாரிய ஊழியர்களுக்கு குஷி.! ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் அரசு-வெளியான முக்கிய அறிவிப்பு
Embed widget