மேலும் அறிய

Scholarship: பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன ஆவணங்கள் தேவை?

Pre Matric Post Matric Scholarship: 2024- 2025ஆம்‌ கல்வியாண்டிற்கு கல்லூரிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

ஆதிதிராவிடர்‌, பழங்குடியின பள்ளி, கல்லூரி மாணவர்கள்,  போஸ்ட்‌ மெட்ரிக்‌, ப்ரிமெட்ரிக் உள்ளிட்ட கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ன ஆவணங்கள் தேவை? பார்க்கலாம்.

ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ கிறித்துவ ஆதிதிராவிடர்‌ மாணாக்கர்களின்‌ கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டம்‌, ப்ரிமெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டம்‌, சுகாதாரமற்ற தொழில்‌ புரிவோர்களின்‌ குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம்‌ (சாதி மற்றும்‌ வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல கல்வி உதவித்‌ தொகை திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை மூலம்‌ வருடந்தோறும்‌ இவை செயல்படுத்தப்படுகின்றன.

2024- 2025ஆம்‌ கல்வியாண்டிற்கு கல்லூரிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதில்‌ ஏற்கனவே கல்லுரியில்‌ சேர்க்கை பெற்று பயின்று வரும்‌ புதுப்பித்தல்‌ மாணாக்கர்கள்‌ கல்வி உதவித்‌ தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. புதுப்பித்தல்‌ மாணாக்கர்கள்‌

கல்லூரிகளில்‌ பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள்‌ மூலம்‌ உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

2024- 2025-ஆம்‌ கல்வியாண்டில்‌ கல்லூரியில்‌ முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணாக்கர்கள்‌ மற்றும்‌ சென்ற வருடத்தில்‌ கல்வி உதவித்‌ தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள்‌ தற்போது தாங்கள்‌ பயிலும்‌ கல்லூரியில்‌ கல்வி உதவித்‌ தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (நோடல் அதிகாரி) அணுகி https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ கல்லூரி மூலம்‌ கல்வி உதவித்‌ தொகைக்கு விண்ணப்பிக்கலாம்‌.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ புதிய கல்லூரி மாணாக்கர்கள்‌ கீழ்காணும்‌ ஆவணங்களைத்‌ தயார்‌ நிலையில்‌ வைத்திருக்க வேண்டும்‌.

  1. வருமானச்‌ சான்றிதழ்‌ (பெற்றோர்‌ ஆண்டு வருமானம்‌ ரூ.2.50 இலட்சத்திற்குள்‌ இருக்க வேண்டும்‌).
  2. சாதிச்‌ சான்றிதழ்‌ (வருமானச்‌ சான்று மற்றும்‌ சாதிச்‌ சான்று ஆகியவை இணைய சான்றுகளாக இருத்தல்‌ அவசியம்‌. இணைய சான்றுகளை பெற அருகிலுள்ள இ-சேவை மையங்களில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌).
  3. மாணாக்கரின்‌ ஆதார்‌ எண்ணுடன்‌ மாணாக்கர்களின்‌ வங்கிக்‌ கணக்கு எண்‌ இணைக்கப்பட்டிருக்க (seeding) வேண்டும்‌. அவ்வங்கிக்‌ கணக்கு செயல்பாட்டில்‌ (Active) உள்ள கணக்காக இருக்க வேண்டும்‌.

இவ்விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து ஆதிதிராவிடர்‌, கிறித்துவ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மாணாக்கர்களின்‌ போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

கல்வி உதவித்‌ தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா சேவை எண்‌ 1800-599-7638 அலுவலக நேரங்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

விண்ணப்பம்‌ சமர்ப்பிக்க கடைசி நாள்‌ 31.01.2025.

இவ்வாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"சிறப்பு மதிப்பெண் வேண்டாம்.. சிறப்புத் தேர்வு நடத்துங்கள்" - ஆசிரியர் செந்தில்குமார் யோசனை.
NIT திருச்சியில் 122 பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
NIT திருச்சியில் 122 பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்... தேர்வு மையத்தில் ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்...
10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்... தேர்வு மையத்தில் ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்...
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
Jose charles martin Vs Aadhav Arjuna : திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
Embed widget