மேலும் அறிய

PM YASASVI: பிரதமர் கல்வி உதவித்தொகை: பள்ளி மாணவர்களுக்கு ரூ.4000- விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு!

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற மாணவர்கள் அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம் என மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் தெரிவித்துள்ளார்.

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை PM- YASASVI- Top Class Education in Schools for OBC, EBC & DNT students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதர பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோர் (BC/ MBC/ DNC), பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT students மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது.

2025- 26ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட (Top Class Schools) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 இலட்சம்

இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள்: 31.10.2025.

கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபாக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள்: 15.11.2025.

புதுப்பித்தல்

இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) (National Schoalrship Portal) Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று, OTR Number (One Time Registration) பதிவு செய்து, 2025- 26ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பித்தல் (Renewal) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புதியது

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.

மேற்படி, OTR Number பயன்படுத்தி 2025- 26ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளம் மூலம் காணலாம்.

கல்வி நிறுவனங்கள் மாணவ/ மாணவியர்கள் விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பரிசீலித்து அடுத்த நிலையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் Login Credential சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட தேசிய கல்வி உதவித்தொகை (https://scholarships.gov.in) இணையதளத்தில் அறியலாம் என்று மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget