மேலும் அறிய

NTA NCET 2023: ஆசிரியர் பணியில் சேர தேசிய பொது நுழைவுத் தேர்வு; விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்

மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேர நடத்தப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.

மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேர நடத்தப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.

2020ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்த தேசிய கல்விக் கொள்கையின்படி, ஆசிரியர் படிப்புக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம்,  ஐஐடி, என்ஐடி, ஆர்ஐஇ போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் குறிப்பிட்ட சில மத்திய, மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் பணியில் சேரலாம். 

பிஏ அல்லது பிஎஸ்சி பாடத்திட்டத்துடன் பிஎட் இணைத்து கற்பிக்கப்படுவதே ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்பாகும். இந்த படிப்பி சேர, தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வில் (என்சிஇடி - National Common Entrance Test) தேர்ச்சி பெற வேண்டும். மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளைப் போலவே ஆசிரியர்களுக்கான தேர்வையும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையே நடத்துகிறது.

இந்த ஆண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 26-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்று (ஜூலை 19) முடிவடைய இருந்தது. 

எனினும் தேர்வர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று என்சிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை என்டிஏ நீட்டித்துள்ளது. விருப்பம் உள்ள தேர்வர்கள் /ncet.samarth.ac.in/ என்னும் இணைய முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க ஜூலை 25-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்

இணையதள வசதி இல்லாதவர்கள் விண்ணப்பிக்கவும் தொலைதூர கிராமப் பகுதிகளில் இருஅதிக அளவிலான தேர்வர்கள் கலந்துகொள்ளவும் ஏதுவாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 34 உதவி மையங்களை என்டிஏ அமைத்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யாபவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் என்டிஏ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் இந்த மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இந்த சேவை முற்றிலும் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு எப்படி?

தமிழ், ஆங்கிலம், இன உட்பட 13 மொழிகளில் கணினி வாயிலாக தேர்வு நடத்தப்படும். இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஹால் டிக்கெட் வெளியீடு,விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. தேர்வர்கள் இந்த விவரங்களை  www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்

தேர்வு எப்போது நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்வு நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

தேர்வு முறை குறித்த முழுமையான தகவல்களுக்கு: https://cdnasb.samarth.ac.in/ncet-site-admin23/pn/Public+Notice+for+Inviting+Online+Application+of+NCET+2023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

உதவி எண்: +91-11-40759000 / 011 – 69227700 
இ- மெயில் முகவரி: ncet@nta.ac.in, https://ncet.samarth.ac.in

கூடுதல் விவரங்களுக்கு: https://cdnasb.samarth.ac.in/ncet-site-admin23/pn/Public+Notice+for+creating+Help+Centre.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து காணவும். 

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

உள்கட்டமைப்பு, சமநிலை இன்னும் பல.. இந்தியாவுக்கே முன்னோடி தமிழ்நாடு: UDISE அறிக்கை
உள்கட்டமைப்பு, சமநிலை இன்னும் பல.. இந்தியாவுக்கே முன்னோடி தமிழ்நாடு: UDISE அறிக்கை
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
பள்ளிகளில் கட்சி நிகழ்வுகளுக்குத் தடை: மீறினால் கடும் நடவடிக்கை- அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை!
பள்ளிகளில் கட்சி நிகழ்வுகளுக்குத் தடை: மீறினால் கடும் நடவடிக்கை- அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை!
பி.ஆர்க். (B.Arch) படிப்பிற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு - முழு விவரம் உள்ளே!
பி.ஆர்க். (B.Arch) படிப்பிற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு - முழு விவரம் உள்ளே!

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
2000 Rupee Note: 2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
Embed widget