மேலும் அறிய

நீட், நெட் சர்ச்சைகள்: கடுமையாகும் தேர்வு முறை- என்டிஏ நிபுணர்கள் குழு மறுசீரமைப்பு!

வெறும் கல்வித் தகுதிகளை மட்டும் நம்பியிருக்காமல், புதிய பாட நிபுணர்களைத் தேர்வு செய்யக் கடுமையான 4 கட்ட மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை, பொதுத் தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரிக்கும் நிபுணர்கள் அடங்கிய குழுவை தற்போது முற்றிலுமாக மாற்றியமைக்கிறது. நீட் மற்றும் யுஜிசி நெட் ஆகிய முக்கியத் தேர்வுகளில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, விரிவான மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 600 நிபுணர்களை என்டிஏ அதிரடியாக நீக்கியுள்ளது.

4 கட்ட மதிப்பீட்டு முறை

வெறும் கல்வித் தகுதிகளை மட்டும் நம்பியிருக்காமல், புதிய பாட நிபுணர்களைத் தேர்வு செய்யக் கடுமையான 4 கட்ட மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதிகள் மற்றும் முன் அனுபவம் ஆகியவை சரிபார்க்கப்படும். ஆதார் ஆவணம், பான் கார்டு அட்டை, வேலைவாய்ப்பு விவரங்கள், தற்போதைய நிறுவனத்தின் தடையில்லாச் சான்று, ரகசியம் காப்பதற்கான உறுதிமொழி மற்றும் முரண்பாடுகள் எதுவும் இல்லை என்பதற்கான ஒப்புதல் கடிதங்களும் விண்ணப்பத்துடன் கண்டிப்பாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இரண்டாம் கட்டத்தில், பாட நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் விண்ணப்பதாரர்களின் கல்விப் பின்னணி, நேர்த்தியான வினாத்தாள் வடிவமைப்பு செய்யும் திறன், ஆராய்ச்சித் தகுதிகள், மற்றும் பாட அறிவின் நிபுணத்துவம் ஆகியவை விரிவாக மதிப்பீடு செய்யப்படும். குறிப்பிட்ட தேர்வுக்குப் பங்களிக்கத் தேவையான நிபுணத்துவம் சம்பந்தப்பட்ட நபருக்கு உள்ளதா என்பதை இது முழுமையாக உறுதி செய்யும் மிக முக்கியப் படியாகும்.

அதிகாரப்பூர்வ வேலை

மூன்றாம் கட்டமாக, விண்ணப்பதாரரின் முந்தைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வரலாறு குறித்துத் தீவிர தனிப்படையான பின்னணி சரிபார்ப்பு நடத்தப்படும். சமர்ப்பித்த தகவல்களையும் தேசியத் தேர்வுகள் முகமை ஆராயும். இந்த மூன்று கட்டங்களிலும் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே நான்காம் கட்டமாக நிபுணர் குழுவில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுவார்கள்.

குறிப்பிட்ட பாடங்கள், தேர்வுகளின் நிலைகள் மற்றும் தேர்வுப் பணிகளின் வகைகளுடன் இவர்களின் நியமனம் இணைக்கப்பட்டிருக்கும். சிறப்பான செயல்பாடு மற்றும் தரநிலைகள் அடிப்படையில் இவர்களின் பணிக்காலம் மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். விதிமீறல் இருந்தால் முன்னறிவிப்புடன் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

10 முக்கிய நுழைவுத் தேர்வுகள்

தேசிய அளவிலான தேர்வுகளுக்கு வினாத்தாள் தயாரிப்பதில் பாட நிபுணர்கள் மிக முக்கியமானவர்கள். ஆண்டுதோறும் என்டிஏ 10 முக்கிய நுழைவுத் தேர்வுகளைப் பல ஷிப்ட்களில் மிகவும் பாதுகாப்பாக நடத்த வேண்டியது குறிப்பிடத்தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

விழுப்புரம் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை!
விழுப்புரம் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை!
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தஞ்சாவூர் பழைய நீதிமன்ற கட்டிடம்... இனி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக்கோட்டையாக மாற்றம்
தஞ்சாவூர் பழைய நீதிமன்ற கட்டிடம்... இனி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக்கோட்டையாக மாற்றம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali 2026 Wishes:
"வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
தீபாவளிக்கு கொட்டப்போகும் மழை? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை.. வானிலை வெளியிட்ட லிஸ்ட்
தீபாவளிக்கு கொட்டப்போகும் மழை? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை.. வானிலை வெளியிட்ட லிஸ்ட்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
"திமுகவின் AI தில்லுமுல்லு" - பெரியார் அறிவுலக புத்தக ஊழலை உரித்துத் தொங்கவிட்ட ராஜ்மோகன்.. அதிர்ச்சி ஆதாரங்கள் வெளியீடு
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
Embed widget