மேலும் அறிய

NEET UG: நெருங்கும் நீட் தேர்வு: என்னவெல்லாம் செய்யலாம்? கூடாது?- 10 முக்கிய அறிவுரைகள்

NEET UG 2024 Exam: நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறும் நிலையத்தில், தேர்வு மையத்தில் என்னவெல்லாம் செய்யலாம், கூடாது என்று பார்க்கலாம். 

மருத்துவக் கனவில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நீட் தேர்வு நாளை மறுநாள் (மே 5) நடைபெற உள்ளது. 

2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை எழுத நாடு முழுவதிலும் இருந்து, 23.8 லட்சம் மாணவர்கள் விண்ணப்பத்து உள்ளனர். சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் பிரிவில் 24 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக 23,81,833 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முன்வந்துள்ளனர். 

இந்த நிலையில் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நேற்று (மே 2) வெளியிடப்பட்டது. தேர்வர்கள் https://neet.ntaonline.in/frontend/web/admitcard/indexindex என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டைப் பெறலாம். 

தேர்வு மையத்தில் அனுமதிச் சீட்டைக் காட்டிய பிறகே தேர்வர்கள், தேர்வு அறைக்குள் செல்ல முடியும். செல்லக்கூடிய அனுமதிச் சீட்டு இல்லாத தேர்வர்கள், தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல தேர்வு நடைபெறும்போதே, மைய கண்காணிப்பாளர்கள் உங்களின் ஹால் டிக்கெட்டைப் பரிசோதிக்கலாம் என்பதால், ஹால் டிக்கெட்டை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

1.30 மணிக்குப் பிறகு அனுமதி இல்லை

தேர்வர்கள், சரியான நேரத்துக்குத் தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாக, அதாவது மதியம் 12 மணிக்கு தேர்வு மையங்கள் திறக்கப்பட்டு, செயல்படும். பகல் 1.30 மணிக்குப் பிறகு தேர்வு மையத்துக்குள் வர, தேர்வர்களுக்கு அனுமதி இல்லை. 

இந்த நிலையில் தேர்வு மையத்தில் என்னவெல்லாம் செய்யலாம், கூடாது என்று பார்க்கலாம். 

என்ன செய்யலாம்?

  • வாய்ப்பிருந்தால், நீட் தேர்வு மையத்துக்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே நேரில் சென்று பாருங்கள், இது தேர்வு நாளைய பயணத்தை எளிதாக்கும்.
  • நீட் தேர்வுக்கான உடை கட்டுப்பாட்டை சரியாகப் பின்பற்றுங்கள். இது தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும்.
  • தேர்வின்போது நேரத்தை அடிக்கடி கவனித்துக்கொண்டே இருங்கள். இல்லாவிட்டால், ஏதேனும் ஒரு பிரிவு கேள்விக்கு அதிக நேரத்தைச் செலவிட்டிருப்பீர்கள்.
  • ஓஎம்ஆர் தாளில் சரியான விடைகளை கவனமாகப் பூர்த்தி செய்யுங்கள்.
  • நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுதி முடித்து விடுங்கள். சந்தேகம் இருக்கும் கேள்விகளைக் கடைசியாக எழுதலாம்.

என்ன செய்யக் கூடாது?

  • ஹால் டிக்கெட்டில் கையெழுத்து இடக்கூடாது. எதையும் எழுதி விடாதீர்கள்.
  • ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள, தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் எதையும் எடுத்து வராதீர்கள்.
  • தேர்வு அறையில் அமர்ந்திருக்கும்போது பிற மாணவர்களுடன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • உங்களுக்கு ஒதுக்கப்படாத இடங்களில் அமரக் கூடாது.
  • தெரியாத கேள்விகளுக்கு பதிலளிக்க நீண்ட நேரம் யோசித்து, நேரத்தை வீணடிக்க வேண்டாம். அந்தக் கேள்வியை விட்டுவிட்டு, பிற கேள்விகளுக்கு பதிலளியுங்கள் நேரமிருந்தால் அந்த கேள்விக்கு கடைசியாக யோசித்து பதில் எழுதலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://neet.nta.nic.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உணவு இடைவேளையிலும் அனுமதி இல்லை; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
உணவு இடைவேளையிலும் அனுமதி இல்லை; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
Embed widget