மேலும் அறிய

MBBS in Tamil: சென்னையில் தமிழ் வழி மருத்துவப் படிப்புக்கு புதிய மருத்துவக் கல்லூரி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் தமிழ் வழியில் மருத்துவ படிப்பை படிப்பதற்காக விரைவில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ் வழியில் மருத்துவ படிப்பை படிப்பதற்காக விரைவில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 32 லட்சம் மதிப்பில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கி, பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார், 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,"அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல்வேறு புதிய மருத்துவ கட்டமைப்பு துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை இல்லாமல் புற்றுநோய் மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பினால் வலியோடு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மாற்று சிகிச்சையாக ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  வேறு மருத்துவமனையில் இல்லாத வகையில் இந்த மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் உதவியோடு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இதுபோன்ற ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை மையம் அமைய உதவ வேண்டும் என்று ரோட்டரி சங்கத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

தனியார் மருத்துவமனையில் 40,000 வரை இந்த சிகிச்சைக்கு செலவு ஆகும், ஆனால் ஓமந்தூரார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கான மருத்துவ செலவு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

 மேலும் பெண்களுக்கு மனநல சிகிச்சை,  புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம், யோகா, உணவு கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து சிகிச்சை மையம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன கருவி இன்று இந்த மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் ஒரு கல்லூரி அமைத்திட வேண்டும் அதில் தமிழ் வழியில் மருத்துவ கல்லூரியாக இருக்க வேண்டும் என்று கேட்டு இருந்தோம்.

ஆனால் முதலில் மருத்துவக் கல்லூரி இல்லாத இடங்களில் மருத்துவ கல்லூரி தொடங்கலாம் என முடிவு செய்துள்ளோம். அதன்படி தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர்,  ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம்   ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை இடம் வைத்துள்ளோம். இந்த கோரிக்கையை அடுத்து, ஆறு மருத்துவ கல்லூரி வந்த பிறகு சென்னையில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. 


MBBS in Tamil: சென்னையில் தமிழ் வழி மருத்துவப் படிப்புக்கு புதிய மருத்துவக் கல்லூரி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மூன்று மருத்துவ பேராசிரியர்கள் கொண்ட குழு, மருத்துவ பாடப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வருகின்றனர். முதலாண்டு மருத்துவக் கல்லூரி பாடப் புத்தகங்கள் தற்போது மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. புத்தகம் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு மொழிபெயர்ப்பு வல்லுநர்களிடம் கொடுத்து சரி பார்க்கப்படும்." 

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Toyota Fortuner Legender on EMI: மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
Embed widget