மேலும் அறிய

’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்

மனோன்மணியம் சுந்தரனார் தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் 25 ஆண்டுகளாக பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:

’’நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி பணியாளர்களாகவும், தொகுப்பூதிய பணியாளர்களாகவும் பணியாற்றி வரும்  53  தொழிலாளர்களுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிலைப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பதாக  குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளன. அறத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பல்கலைக்கழகத்திலேயே அறமும், மனிதநேயமும் மீறப்படுவது கண்டிக்கத்தக்கது.

53 பேர் தொகுப்பூதியத்தில் பணி

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தூய்மைப் பணியாளர்கள், இரவுக் காவலர்கள், பாதுகாவலர்கள், மின்னியலாளர்கள்,  அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளில்  தொகுப்பூதிய பணியாளர்களாக 53 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அதே பல்கலைக்கழகத்தில்  17 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை  பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணிச் செயல்பாடுகள் குறித்து  எந்தப் புகாரும் இதுவரை  எழவில்லை.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விதிகளின்படி தினக்கூலி பணியாளராக சேரும் ஒருவர் ஐந்தாண்டுகள் பணி செய்த பின்னர் தொகுப்பூதிய பணியாளராக மாற்றப்படுவார். அடுத்த பத்தாண்டுகள் தொகுப்பூதிய பணியாளராக பணி செய்த பின்னர் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த 53 பணியாளர்கள் விஷயத்தில் மட்டும் இந்த விதிகளை பல்கலைக்கழக நிர்வாகம் கடைபிடிக்க மறுக்கிறது.

நீதி வழங்க மறுக்கும் நிர்வாகம்

தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும்  53  பேரும்  50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும்  சென்று வேலை தேட முடியாது. பணி நிலைப்பு என்பது அவர்களின் உரிமை. இந்த உரிமையை பெறுவதற்காக தகுதியை அவர்கள்  2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெற்று விட்டனர். அதனடிப்படையில் பணி நிலைப்பு வழங்குங்கள் என முந்தைய துணை வேந்தரிடம் 3 முறையும், இப்போதைய துணை வேந்தரிடம் இரு முறையும் மனு கொடுத்துள்ளனர். ஆனாலும் நீதி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுக்கிறது.

பணி நிலைப்பு கிடைக்காத மன உளைச்சலில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்;  ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பணி செய்ய முடியாத அளவுக்கு படுக்கையில் வீழ்ந்துள்ளார்.  இதனால் அவர்களின் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதே நிலை பிற பணியாளர்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது.

தொகுப்பூதிய பணியாளர்களின் தேவைகளும், மனித உரிமைகளும்  மதிக்கப்பட வேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 17 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும்  தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி நிலைப்பு  வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும். தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு... ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரடி கலந்தாய்வு: எங்கு தெரியுமா?
மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு... ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரடி கலந்தாய்வு: எங்கு தெரியுமா?
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
"எங்கள் வாழ்நாளைப் பள்ளிக்கே தந்துவிட்டோம்!" - அமைச்சரிடம் மனு அளித்து கதறிய பகுதிநேர ஆசிரியர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
Embed widget