மேலும் அறிய

Hindi Imposition: இந்தியைத் திணிக்கவில்லை; மராத்திதான் கட்டாயம்- டிவிஸ்ட் அடித்த மகாராஷ்டிர முதல்வர்

எதிர்க் கட்சிகளான சிவ சேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

இந்தியைத் திணிக்கவில்லை என்றும் மாநிலத்தில் மராத்தி மொழிதான் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது எனவும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறி உள்ளார்.

மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 3ஆவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் என்று அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மும்மொழிக் கொள்கை அமல்

ஏற்கெனவே மாநிலத்தில் ஆங்கிலம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகள் கட்டாயமாக உள்ளன. அதே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் மராத்தி மீடிய பள்ளிகளில் 2 மொழிகள் மட்டுமே அமலில் உள்ளன. இதனால் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப் படுவதாகத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், எதிர்க் கட்சிகளான சிவ சேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. எனினும் இந்தத் தகவலை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மறுத்துள்ளார்.

இந்தி கட்டாயம் ஆக்கப்படவில்லை

இதுகுறித்துப் புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்தியைத் திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுவது தவறு. மராத்திக்குப் பதிலாக இந்தி கட்டாயம் ஆக்கப்படவில்லை. மராத்தி படிப்பதுதான் கட்டாயம்.

மூன்றாவது மொழியாக இந்தி, தமிழ், மலையாளம் அல்லது குஜராத்தியைக் கற்பிக்கலாம். இந்தி மொழிக்கு மட்டுமே போதிய ஆசிரியர்கள் உள்ளன. பிற இந்திய மொழிகளைக் கற்பிக்க ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லை'' என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

மோகன் பாகவத் தலையிட வேண்டும்

இதற்கிடையே, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா, இந்தித் திணிப்பு முடிவை திரும்பப் பெறுவதை உறுதி செய்ய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியது. பாகவத்துக்கு எழுதிய கடிதத்தில், மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் சந்தீப் தேஷ்பாண்டே, இந்தித் திணிப்பு இந்துக்களை பிளவுபடுத்தும் என்றும், நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் என்னதான் குளறுபடி? மென்பொருள் நிறுவனம் விளக்கம்
CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் என்னதான் குளறுபடி? மென்பொருள் நிறுவனம் விளக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!
புதுச்சேரி சென்டாக்: 'நீட்' அல்லாத படிப்புகளுக்கான வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு!
புதுச்சேரி சென்டாக்: 'நீட்' அல்லாத படிப்புகளுக்கான வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்றும் சென்னையில் மழை வெளுக்குமா? 27 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழை வெளுக்குமா? 27 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
Mekedatu Dam Resolution : சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- இன்று சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- இன்று சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
C Mahendran CPI: தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
Kovai Neet Student : நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?
நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?"
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
EPS vs Vijay: 9-5 Desk Job பார்க்கும் முதல்வர் விஜய்.! இந்த நேரத்திலாவது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாரா.? விளாசும் இபிஎஸ்
9-5 Desk Job பார்க்கும் முதல்வர் விஜய்.! இந்த நேரத்திலாவது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாரா.? விளாசும் இபிஎஸ்
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
Embed widget