மேலும் அறிய

PPC 2023: மாணவர்களைச் சந்திக்கும் பிரதமர் மோடி; "பரிக்‌ஷா பே சார்ச்சா"-க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இன்று (டிசம்பர் 30) கடைசி நாள் ஆகும்.

பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரை ஆண்டுதோறும் பிரதமர் மோடி சந்திக்கிறார். பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இன்று (டிசம்பர் 30) கடைசி நாள் ஆகும்.

பரிக்‌ஷா பே சார்ச்சா:

2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 6-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள mygov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். வழக்கமாக இதற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். 

நேரடியாக நடைபெற்ற பரிக்‌ஷா பே சார்ச்சா

முதன்முறையாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியான “பரிக்‌ஷா பே சார்ச்சா 1.0”, கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி டெல்லியில் உள்ள டால்கடோரா மைதானத்தில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்களுடனான “பரிக்‌ஷா பே சார்ச்சா 2.0” கலந்துரையாடல் நிகழ்ச்சியும் அதே மைதானத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்றது.


PPC 2023: மாணவர்களைச் சந்திக்கும் பிரதமர் மோடி;

மூன்றாவது ஆண்டாக பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற “பரிக்‌ஷா பே சார்ச்சா 2020” கலந்துரையாடல் நிகழ்ச்சியும் டால்கடோரா மைதானத்தில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது.

இந்த சூழலில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற “பரிக்‌ஷா பே சார்ச்சா 2021” நிகழ்ச்சியில் உலகெங்கும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.

மாணவர்களுடன் சந்திப்பு:

இதற்கிடையே 2023ஆம் ஆண்டுக்கான பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியபோது, ''பொதுத் தேர்வுகள் விரைவில் வர உள்ளன. அதனால், பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியும் விரைவில் நடைபெற உள்ளது. நம்முடைய ஆற்றல் மிகுந்த இளைஞர்களுடன் கலந்துபேசும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். அவர்களின் சவால்கள், லட்சியங்களைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

பரிக்‌ஷா பே சார்ச்சா 2023 நிகழ்ச்சி தொடர்பான சுவாரசியமான நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு தேர்வு எழுதும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். நம் மாணவர்களுக்கு, அழுத்தம் இல்லாத தேர்வுச் சூழலை உருவாக்க, அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

முன்பதிவுக்கு இன்றே கடைசி

பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சிக்கான முன்பதிவு இன்றுடன் (டிசம்பர் 30ஆம் தேதி) முடிவடைகிறது. இதையடுத்து, விரைவில் நிகழ்ச்சித் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன. 2023ஆம் ஆண்டுக்கான பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி மார்ச் கடைசி வாரத்திலோ ஏப்ரல் முதல் வாரத்திலோ நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு:  mygov.in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TET தேர்வு.. தவெக அரசின் இரட்டை வேடம்.. திமுக ஆட்சியின் நடவடிக்கைகளை பட்டியலிட்ட அன்பில் மகேஸ்!
TET தேர்வு.. தவெக அரசின் இரட்டை வேடம்.. திமுக ஆட்சியின் நடவடிக்கைகளை பட்டியலிட்ட அன்பில் மகேஸ்!
Free Coaching: தேர்வர்களே… TNPSC, SSC உள்ளிட்ட அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- பங்கேற்பது எப்படி?
Free Coaching: தேர்வர்களே… TNPSC, SSC உள்ளிட்ட அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- பங்கேற்பது எப்படி?
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘சென்டம்’ இலக்கு? விழுப்புரம் பள்ளிகளுக்கு ஆட்சியர் முக்கிய உத்தரவு!
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘சென்டம்’ இலக்கு? விழுப்புரம் பள்ளிகளுக்கு ஆட்சியர் முக்கிய உத்தரவு!
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Anand : ’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
வட கிழக்கு பருவ மழை பாதிப்பை சமாளிக்க CM விஜய்யின் மாஸ் PLAN.! IAS அதிகாரிகள் நியமனம் – யார் எந்த இடத்திற்கு.?
மழை பாதிப்பை சமாளிக்க CM விஜய்யின் மாஸ் PLAN.! IAS அதிகாரிகள் நியமனம் – யார் எந்த இடத்திற்கு.?
ADMK To TVK : தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
China Iran Vs America: ஈரான் மீது பொருளாதாரத் தடை; கொந்தளித்த சீனா; “இப்படி பண்ணா தான் சரியா வரும்“: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
ஈரான் மீது பொருளாதாரத் தடை; கொந்தளித்த சீனா; “இப்படி பண்ணா தான் சரியா வரும்“: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
TVS iQube MillionR எடிஷன் அறிமுகம்! 212 கி.மீ ரேஞ்ச், அதிக இடவசதி, ரூ.60 ஆயிரம் விலையில்- வேறென்ன ஸ்பெஷல்?
TVS iQube MillionR எடிஷன் அறிமுகம்! 212 கி.மீ ரேஞ்ச், அதிக இடவசதி, ரூ.60 ஆயிரம் விலையில்- வேறென்ன ஸ்பெஷல்?
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
Embed widget