மேலும் அறிய

JEE Main 2026: ஜேஇஇ மெயின் தேர்வு மைய விவரங்கள் வெளியீடு- நேரடியாகப் பதிவிறக்க இணைப்பு உள்ளே!

ஜே.இ.இ மெயின் தேர்வு 2026 அமர்வு 2-க்கான தேர்வு மைய நகர விவரச் சீட்டு வெளியீடு; நேரடியாகப் பதிவிறக்கம் செய்வது என்று விரிவாகக் காணலாம்.

ஜே.இ.இ. மெயின் 2026 அமர்வு இரண்டு தேர்வெழுதும் விண்ணப்பதாரர்கள் தங்களது பயணம் மற்றும் தங்குமிடங்களை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு வசதியாக, தேர்வு மைய நகர விவரச் சீட்டை தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வுக்கான இரண்டாம் அமர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையம் எந்த நகரத்தில் அமைந்துள்ளது என்பதை ஜே.இ.இ மெயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

இந்த நகர விவரச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய, விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் அல்லது பிறந்த தேதியை உள்ளிட்டு இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.

இந்த நகர விவரச் சீட்டு, தேர்வுக்கான அதிகாரப்பூர்வ நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) அல்ல என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தேர்வு நடைபெறும் நகரத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஒரு வசதி மட்டுமே. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, தேர்வு தொடங்குவதற்கு மூன்று முதல் நான்கு நாட்களுக்கு முன்னதாக, தனியாக வெளியிடப்படும்.

தேர்வு எப்போது?

ஜே.இ.இ. மெயின் 2026 அமர்வு இரண்டு தேர்வுகள், வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பான விவரங்களை இந்த இணைப்பில் காணலாம். https://cdnbbsr.s3waas.gov.in/s3f8e59f4b2fe7c5705bf878bbd494ccdf/uploads/2026/03/202603211564081245.pdf

 

தேர்வு மைய விவரச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

  1. ஜே.இ.இ. மெயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://jeemain.nta.nic.in/-க்குச் செல்லவும்.

  2. முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஜே.இ.இ மெயின் 2026 அமர்வு இரண்டு தேர்வு நகர விவரச் சீட்டுக்கான இணைப்பைச் சொடுக்கவும்.

  3. இப்போது தோன்றும் புதிய பக்கத்தில், உங்களின் விண்ணப்ப எண், கடவுச்சொல் மற்றும் பாதுகாப்பு குறியீட்டைச் சரியாக உள்ளிடவும்.

  4. சமர்ப்பிக்கும் பொத்தானை அழுத்தியதும், உங்களுக்கான தேர்வு நகர விவரச் சீட்டு திரையில் தோன்றும்.

  5. அதில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து, அதைப் பதிவிறக்கம் செய்து, எதிர்காலத் தேவைக்காக ஒரு அச்சு நகல் எடுத்துக் கொள்ளவும்.

இந்தச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் இருந்தால், விண்ணப்பதாரர்கள் தேசிய தேர்வு முகமையின் உதவி மைய எண்ணையோ அல்லது மின்னஞ்சலையோ தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://jeemain.nta.nic.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்ந்து பார்க்கவும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Embed widget