மேலும் அறிய

CAT 2022: முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேர கேட் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி.. முழு விவரம்

முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் கேட் தேர்வுக்கு (2022) விண்ணப்பிக்க இன்று (செப்டம்பர் 21ஆம் தேதி) கடைசித்தேதி ஆகும். 

முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் கேட் தேர்வுக்கு (2022) விண்ணப்பிக்க இன்று (செப்டம்பர் 21ஆம் தேதி) கடைசித்தேதி ஆகும். முன்னதாக கேட் 2022 விண்ணப்பப்பதிவுக்கான கால அவகாசம் செப்டம்பர் 14ஆக இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 

நாடு முழுவதும் உள்ள ஐஐஎம்கள் மற்றும் பிசினஸ் பள்ளிகளில் மேலாண்மைப் படிப்புகளில் கேட் நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

குறிப்பாக அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிபூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சி, உதய்பூர், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் உள்ள ஐஐஎம்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான கேட் தேர்வு நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான சிஜிபிஏவைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் இட ஒதுக்கீட்டின்கீழ் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 

இந்த நிலையில் ,முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் கேட் தேர்வுக்கு (2022) விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் செப்டம்பர் 14ஆக இருந்த நிலையில், கால அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டது. அதாவது செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. 

முன்னதாக கேட் 2022-க்கான அனுமதிச் சீட்டை அக்டோபர் 27 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு முடிவுகள் 2023ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


CAT 2022: முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேர கேட் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி.. முழு விவரம்

 

CAT 2022 விண்ணப்பப் படிவத்துடன் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* பாஸ்ட்போர்ட் அளவு புகைப்படங்கள் 
* கையெழுத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
* சாதிச் சான்றிதழ்
* படிப்பு விவரங்கள்
* சரியான இ-மெயில் முகவரி
* மொபைல் எண்

கேட் 2022-ன் தேர்வு மையங்களாக 6 நகரங்கள் வரை விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம்
* ரூ.2,300
* ரூ.1,150 ( தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு)

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் iimcat.ac.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். 

கூடுதல் விவரங்களுக்கு: https://cdn.digialm.com//per/g01/pub/756/ASM/WebPortal/19/PDF/CAT_2022_Information_Bulletin.pdf

இதையும் வாசிக்கலாம்: UG Admissions 2022: க்யூட் தேர்வு முடிவுகள்: தமிழ்நாடு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம் 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்களே.. பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு- அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
மாணவர்களே.. பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு- அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!
School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Annamalai Politics : அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
TVK Vijay: டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?
டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?
CM Vijay Cabinet: சிஎம் விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
CM விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
Annamalai: கட்சியில் இருந்து நீக்கப்பட்டேனா.!! பிராடு அண்ணாமலை ரசிகர்கள் தான் காரணம்- கே.பி.ராமலிங்கம் பகீர் புகார்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டேனா.!! பிராடு அண்ணாமலை ரசிகர்கள் தான் காரணம்- கே.பி.ராமலிங்கம் பகீர் புகார்
Udhayanidhi Stalin: நம்ம குடும்பமே ஓட்டு போடாம ஏமாத்திட்டாங்க.. ஆதங்கப்பட்ட உதயநிதி!
Udhayanidhi Stalin: நம்ம குடும்பமே ஓட்டு போடாம ஏமாத்திட்டாங்க.. ஆதங்கப்பட்ட உதயநிதி!
காங்கிரஸ் இல்லாமல் இந்தியா கூட்டணியே இல்லை.. திமுகவை விளாசிய மாணிக்கம் தாகூர்!
காங்கிரஸ் இல்லாமல் இந்தியா கூட்டணியே இல்லை.. திமுகவை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Embed widget