மேலும் அறிய

CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!

ICAI CA Final Result 2026: கடந்த சில நாட்களாகவே சி.ஏ. தேர்வெழுதிய மாணவர்களும், இத்துறையைச் சேர்ந்த கணக்கீட்டு நிபுணர்களும் இது தொடர்பான பல ஸ்கிரீன்ஷாட்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

சி.ஏ. இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் தேர்வை நடத்தும் ஐ.சி.ஏ.ஐ. (ICAI) இணையதளத்தில் தரவுகள் கசிந்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சி.ஏ. இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

ஐ.சி.ஏ.ஐ. எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் சமீபத்தில் நடத்திய சி.ஏ. இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள ஒரு புதிய சர்ச்சை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விடைத்தாள்களைத் திருத்தும் பிரத்யேக ஐ.சி.ஏ.ஐ இணையதளத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், முக்கியத் தரவுகள் கசிந்துள்ளதாகவும் எக்ஸ் பயனர்கள் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

சில நாட்களாக எழுந்துள்ள பிரச்சினை

கடந்த சில நாட்களாகவே சி.ஏ. தேர்வெழுதிய மாணவர்களும், இத்துறையைச் சேர்ந்த கணக்கீட்டு நிபுணர்களும் இது தொடர்பான பல ஸ்கிரீன்ஷாட்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தப் பதிவில், விடைத்தாள் மதிப்பீட்டாளர்களின் லாகின் விவரங்கள், மாணவர்களின் விடைத் தாள்களை திருத்துவதற்கான ரகசிய வழிகாட்டுதல்கள் மற்றும் சில முக்கியத் தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய ஊடுருவல் சம்பவம் உண்மையெனில், ஒட்டுமொத்த சி.ஏ தேர்வு மதிப்பீட்டு முறையின் நம்பகத்தன்மை முற்றிலுமாகக் கேள்விக்குறியாகும்.

இந்தியாவிலேயே கடினமான தேர்வு

இந்தியாவிலேயே மிகவும் கடினமான தொழில்முறைத் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் சி.ஏ தேர்வை, மாணவர்கள் பல ஆண்டுகள் இரவு பகலாகப் படித்து எழுதுகிறார்கள். இந்நிலையில், இதுபோன்ற இணையதளப் பாதுகாப்பு மீறல் செய்திகள் தங்களின் கடின உழைப்பை வீணாக்கும் வகையில் அமைந்திருப்பதாக மாணவர் சங்கங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. மேலும், விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்ற அச்சமும் தேர்வர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

இருப்பினும், இந்த இணையதள ஊடுருவல் மற்றும் தரவு கசிவு குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.சி.ஏ.ஐ தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்போ அல்லது மறுப்போ இதுவரை முழுமையாக வெளியாகவில்லை. சி.ஏ தேர்வு முடிவுகள் வெளிவர உள்ள சூழ்நிலையில், இந்த விவகாரம் இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Embed widget