மேலும் அறிய

School Holiday Today | விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.

விழுப்புரம்  : விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இன்று (அக்டோபர் 23) ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று திரும்புவதில் சிரமம் ஏற்படக்கூடும். மேலும், மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்குதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், “ பல மணிநேரங்களுக்குப் பிறகு, தெற்குச் சென்னையிலிருந்து மேகங்கள் மெல்ல சென்னை நகருக்குள் நகர்ந்து வருகின்றன. சென்னையின் கடலோரப் பகுதிகளில் மழை தொடங்கத் தொடங்கி, நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கும் பரவும். இன்று சென்னைக்கு மிக முக்கியமான நாள் அல்ல; 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகள் சென்னைக்கு மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும். தமிழகத்தின் உட்புறப் பகுதிகள் - டெல்டா மற்றும் தெற்குத் தமிழகப் பகுதிகள், கடலூர் விருதுநகர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தென்காசி, திருப்பூர், அரியலூர், டெல்டா பகுதிகள், திருவாரூர், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் பரவலான மழை பெய்துள்ளது.” என விவரித்துள்ளார்.

இன்று மிக கன மழைக்கான எச்சரிக்கை:

இதனிடையே, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது. அதனால் இன்று கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

கன மழைக்கான எச்சரிக்கை:

மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை மற்றும் திருவள்ளூர்' மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை பகுதிகளுக்கான இன்றைய வானிலை

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:
23-10-2026 முதல் 26-10-2026 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:
23-10-2026: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு - தென்மேற்கு- மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:
23-10-2026 முதல் 26-10-2026 வரை: கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: வார்னிங் மட்டுமா? ஆக்‌ஷன் வருமா? பனையூரில் இன்று தவெக MLA-க்கள் கூட்டம் - CM விஜய் ப்ளான்?
வார்னிங் மட்டுமா? ஆக்‌ஷன் வருமா? பனையூரில் இன்று தவெக MLA-க்கள் கூட்டம் - CM விஜய் ப்ளான்?
TN Weather News: உருவாகிறது புதிய புயல்..! இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
உருவாகிறது புதிய புயல்..! இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
"அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்" - தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம்!
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: வார்னிங் மட்டுமா? ஆக்‌ஷன் வருமா? பனையூரில் இன்று தவெக MLA-க்கள் கூட்டம் - CM விஜய் ப்ளான்?
வார்னிங் மட்டுமா? ஆக்‌ஷன் வருமா? பனையூரில் இன்று தவெக MLA-க்கள் கூட்டம் - CM விஜய் ப்ளான்?
TN Weather News: உருவாகிறது புதிய புயல்..! இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
உருவாகிறது புதிய புயல்..! இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
"அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்" - தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம்!
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
"புனித தலத்தில் இப்படியா?" - 1500 வருடப் பழமையான கோயிலுக்குள் செருப்புடன் சென்ற அமைச்சர்!
Embed widget