Employment Renewal Online: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க வேண்டுமா? ஆன்லைனில் ஒரு நிமிடம் போதும்!
வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவை ஆன்லைனில் ஒரு நிமிடத்தில் மேற்கொள்ளலாம்.
தமிழக அரசின் உத்தரவின் படி ஆன்லைனில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத்தவறியவர்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகம் என்பது இளைஞர்கள் மட்டுமில்லாது அனைத்து வயதினருக்குமான முக்கியமான இடமாகவே விளங்கி வந்தது. நிச்சயம் இங்கு நம்முடைய கல்வித்தகுதிகளை பதிவு செய்துவைத்தால் அரசு வேலை உறுதி என்ற மனநிலையில் தான் மக்கள் இருந்து வந்தனர். குறிப்பாக முன்பெல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து வரும் கடிதங்களுக்காக காத்திருத்த நிலை எல்லாம் ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது தான் எந்த அரசுப்பணிக்கு சேர வேண்டும் என்றால் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ச்சியாக பதிவு செய்து வந்தவர்களுக்கு சில மதிப்பெண்களை தேர்வாணையம் வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத்தவறியவர்களுக்காக மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. குறிப்பாக 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத்தவறியவர்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என கால அவகாசத்தை வழங்கி இருந்தது. இந்நிலையில் இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை ஆன்லைனில் ஒரு நிமிடத்தில் எப்படி மேற்கொள்ளலாம்? என அனைவரும் தெரிந்துக்கொள்வோம்.
முதலில், நீங்கள் https://tnvelaivaaippu.gov.in/Empower/ என்ற இணையதளத்தில் செல்ல வேண்டும். பின் அதனுள் உங்கள் User Id மற்றும் Password ஆகியவற்றைக் கொடுத்து உள்ளே நுழைய வேண்டும்.
இதில் கேட்கப்பட்டுள்ள User Id மற்றும் Password என்பது வேறொன்றுமில்லை. User Id என்பது Resigstation Number மற்றும் பாஸ்வோர்ட் என்பது உங்களுடைய பிறந்த தேதி தான். எனவே இதனைக்கொடுத்து நீங்கள் வேலைவாய்ப்பு அலுவலக இணையதள முகவரிக்குள் செல்லலாம். மேலும் பொதுவாக Resigtration Number என்பது நீங்கள் வேலைவாய்ப்பைப் பதிவு செய்த மாவட்டம், எந்த வருடம். பாலினம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இருக்கும். ( உதாரணமாக நீங்கள் தஞ்சாவுரில் 1998 ஆம் ஆண்டு பதிவு செய்திருந்தால், அதுவும் பெண்ணாக இருந்தால், TJD1999FXXXX உடன் 8 இலக்க எண் இருக்கும்.)
நீங்கள் உங்களின் பிறந்த தேதியினை பாஸ்வோர்டாகக் குறித்து உள்நுழைந்துக்கொள்ளலாம். அதன்பிறகு நிரந்தர பாஸ்வோர்டை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நீங்கள் உங்கள் பாஸ்வோர்டை மறந்து இருந்தால் Forget Password கொடுத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம்.
தொடர்ந்து வேலைவாய்ப்பு அலுவலக இணையப்பக்கத்தில் கேட்கப்படும் அனைத்து பதிவுகளையும் சரியாக கொடுத்து உள்ளே நுழைந்த உடன் உங்கள் பெயர் மற்றும் தரவுகள் இருக்கும் அதை வைத்து நீங்கள் உறுதிப்படுத்தி கொள்ளலாம்.இதையடுத்து Update Profile என்பதை கிளிக் செய்த உடன் Renewal என்ற ஆப்ஷன் உங்களுக்கு வரும் அதில் Candidate Renewal என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்தப்படியாக உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு உங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு Renewal ஆகி விடும். அடுத்த Renewal மாதம் மற்றும் ஆண்டு எப்போது என்ற விவரம் உங்களுக்குத் தெரிய வரும். அவ்வளவு தான் எளிதாக ஆன்லைனில் Employment Renewal செய்து கொள்ளலாம்.