மேலும் அறிய

GST on Education | கல்விச் சான்றிதழ்கள் மீது 18% ஜிஎஸ்டி வரி விதிப்பதா? தமிழக அரசுக்கு ஒபிஎஸ் கண்டனம்..

இதுபோன்றதொரு அறிவிப்பினைத் தமிழக அரசின் வணிக வரித்துறை அனுப்பியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனக் கூறியுள்ளார்

கல்விக்கு வரி என்பது எந்த வடிவத்தில் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிய தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  

"தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் 19-06-2017 அன்று சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டபோது, அதனைப் பொறுப்புக் குழுவிற்கு அதாவது Select Committee-க்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, திருப்பூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளிடையே காணொலிக் காட்சி வாயிலாகப் பேசியபோது பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்பதற்கு மாற்றுப் பெயர் கொள்ளை வட்டி என்றும் பிரிட்டிஷ் ஆட்சியின்போது விதிக்கப்பட்ட வரியுடன் ஒத்திருப்பதாகவும், 29-11-2020 அன்று தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது அதை அண்ணா பல்கலைக்கழகச் சான்றிதழ்களுக்கான கட்டணத்தின் மீது விதித்திருப்பது, ஏற்கெனவே கல்விக் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

GST on Education | கல்விச் சான்றிதழ்கள் மீது 18%  ஜிஎஸ்டி வரி விதிப்பதா? தமிழக அரசுக்கு ஒபிஎஸ் கண்டனம்..

அண்ணா பல்கலைக்கழகத்தின் சேவைகளுக்குப் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி செலுத்தப்பட வேண்டுமென்றும், 2017-ல் பொருட்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபின், வரிப் பிடித்தம் செய்திருந்தால் அதை தாமதமின்றி அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்றும், வரி பிடிக்கப்பட்டிருந்தால் கிட்டத்தட்ட 16 கோடி ரூபாய் அரசுக்கு வரி கிடைத்திருக்கும் என்றும், இந்த வருவாயை இனியும் இழக்காமல் - மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டுமென்றும் தமிழக அரசின் வணிக வரித்துறை கடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அறிவிப்பு ஒன்றினை வழங்கியுள்ளதாகப் பத்திரிகைகளில் நேற்று செய்தி வந்துள்ளது.

இதன் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் 500-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளதாகவும், அதில் இடமாற்றுச் சான்றிதழுக்கான கட்டணம், உண்மைத் தன்மை சரிபார்ப்புச் சான்றிதழுக்கான கட்டணம் ஆகியவற்றின் மீது 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரியும், மதிப்பெண் பட்டியல், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல், தற்காலிகப் பட்டச் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணத்தில் 18 விழுக்காடு வரியும், தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறச் செலுத்தும் கட்டணத்தில் 18 விழுக்காடு வரியும், விடைத்தாளின் நகலினைப் பெறுவதற்கான கட்டணத்தில் 18 விழுக்காடு வரியும் வசூலிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும், இதற்கென புதிதாக ஜி.எஸ்.டி. பதிவு எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

GST on Education | கல்விச் சான்றிதழ்கள் மீது 18%  ஜிஎஸ்டி வரி விதிப்பதா? தமிழக அரசுக்கு ஒபிஎஸ் கண்டனம்..

இதன்படி, ஒரு சான்றிதழுக்கு 1,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றால், 180 ரூபாயைப் பொருட்கள் மற்றும் சேவைகள் வரியாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் கூடுதலாகச் செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. எண்ணைப் பெற்றதிலிருந்து, அண்ணா பல்கலைக்கழகம் இதனை வசூலிக்கத் தயாராகிவிட்டது என்பது தெளிவாகியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மத்தியில், குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியர் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது.

பொருட்கள் மற்றும் சேவைகள் வரி நடைமுறைக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இதுபோன்றதொரு அறிவிப்பினைத் தமிழக அரசின் வணிக வரித்துறை அனுப்பியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைக்கு சான்றிதழ்களுக்கான கட்டணத்தில் ஆரம்பித்து, பிற்காலத்தில் பிற இனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டால், ஏழை, எளிய மாணவர்களுடைய பெற்றோர்களின் கடன் சுமை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது.

GST on Education | கல்விச் சான்றிதழ்கள் மீது 18%  ஜிஎஸ்டி வரி விதிப்பதா? தமிழக அரசுக்கு ஒபிஎஸ் கண்டனம்..

தமிழக அரசின் வணிகவரித் துறை அறிவிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஆகியவை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டுமென்பதே மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இல்லையெனில், 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பிற்கு ஏற்ப தற்போது மாணவ, மாணவியரிடமிருந்து பல்வேறு சான்றிதழ்களுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்பதும், வரி என்ற போர்வையில் தற்போதுள்ள கட்டணத்திற்கு மேல் கூடுதலாக கட்டணத்தைக் கல்லூரிகள் வசூலிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதும், இதுகுறித்து வருகின்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முறையிட்டு அதற்கு விதிவிலக்குப் பெற வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு என்பதோடு, கல்விக்கு வரி என்பது எந்த வடிவத்தில் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிய தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர்  இதில் தனிக் கவனம் செலுத்தி, சான்றிதழ்களுக்கான 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தலையில் விழாதவாறு நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" - இவ்வாறு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்தார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget