மேலும் அறிய

Arts College PG Admission: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகள்; விண்ணப்பிக்க செப்.1 வரை அவகாசம் நீட்டிப்பு

Govt Arts and Science College PG Admission 2023: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர செப்டம்பர் 1ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Govt Arts and Science College PG Admission 2023: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர செப்டம்பர் 1ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் 24,341 இடங்கள் உள்ளன. இவற்றை 2023-24ஆம் ஆண்டில் நிரப்புவதற்கான அறிவிப்பை கல்லூரிக்‌ கல்வி இயக்குநர் வெளியிட்டார். இதன்படி, முதுநிலை கலை மற்றும்‌ அறிவியல்‌ பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்‌ சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை  www.tngasa.inwww.tngasa.org என்ற இணையதள முகவரிகளில்‌ பதிவு செய்யலாம்‌ என்று தெரிவிக்கப்பட்டது.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம்‌ விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின்‌ பட்டியல்‌ மேற்குறித்த இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விண்ணப்பிக்கும்‌ ஐந்து கல்லூரிகளுக்கும்‌ விண்ணப்பக்‌ கட்டண விவரம்‌

விண்ணப்பக்‌ கட்டணம்‌ - ரூ. 58/- 
பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ.2/- 

எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்‌ கட்டணம்‌ ஏதுமில்லை
பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ. 2/- மட்டும்‌

விண்ணப்பம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணம்‌ 

விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌ Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம்‌ இணையதள வாயிலாக செலுத்தலாம்‌. இணையதள வாயிலாகக்‌ கட்டணம்‌ செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில்,‌ “The Director, Directorate of Collegiate Education, Chennai — 15” என்ற பெயரில்‌ 14.08.2023 அன்று அல்லது அதற்குப்‌ பின்னர்‌ பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும்‌ அல்லது நேரடியாகவும்‌ செலுத்தலாம்‌.

மாணவர்‌ சேர்க்கை வழிகாட்டி மற்றும்‌ கால அட்டவணையை மாணாக்கர்கள்‌ www.tngasa.inwww.tngasa.org என்ற இணையதளங்கள்‌ வாயிலாக அறிந்துகொள்ளலாம்‌.

இணையதளம் வாயிலாக மாணவர்கள் ஆகஸ்ட் 14 முதல் விண்ணப்பம்‌ பதிவு செய்த நிலையில், விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22 இறுதி நாளாக இருந்தது. இந்த நிலையில், முதுகலை படிப்புகளில் சேர செப்டம்பர் 1ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து உயர் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப் படிப்புகளில் முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை 14.08.2023-ல் துவங்கி www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

என்ன காரணம்?

சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், முதுநிலை பட்டப் படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 01.09.2023 வரை நீட்டிக்கப்படுகிறது'' என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

கூடுதல் தகவல்களுக்கு: https://static.tneaonline.org/docs/arts/tngasa_booklet_pg.pdf?t=1692181053929 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பிப்பது குறித்து உயர் கல்வித் துறை வெளியிட்ட வீடியோ வடிவிலான விளக்கக் காணொலியை https://www.youtube.com/watch?v=WWAz0Ns9gzM என்ற இணைப்பில் காணலாம். 

தொடர்பு எண்கள்‌: 93634 62070, 93634 62042, 93634 62007, 93634 62024 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget