மேலும் அறிய

கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்

இந்திய கன்டென்ட் கிரியேட்டர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்களின் திறன்களை மேம்படுத்தவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கிரியேட்டிவ் திறனை அதிகரித்து படைப்பாளர்களை ஊக்குவிக்க 15,000 பேருக்கு ஏஐ பயிற்சி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக கூகுள், யூடியூப் உடன் அரசு இணைந்து செயல்பட உள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவின் டிஜிட்டல் படைப்புத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்த, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒரு புதிய முன்னெடுப்பை அறிவித்துள்ளது. இதன்படி, முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் யூடியூப் உடன் இணைந்து, இந்திய இளைஞர்கள் 15,000 பேருக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. Indian Institute of Creative Technologies இதை முன்னெடுத்துள்ளது. 

தற்போதைய டிஜிட்டல் உலகில் மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதை கருத்தில் கொண்டு, இந்திய கன்டென்ட் கிரியேட்டர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்களின் திறன்களை மேம்படுத்தவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

க்ரியேட்டிவ் வேலைகளில் ஏஐ பயன்பாடு

இந்தப் பயிற்சியின் மூலம் வீடியோ உருவாக்கம், எடிட்டிங், ஆடியோ வடிவமைப்பு, புதிய சிந்தனைகளை உருவாக்குதல் மற்றும் அனிமேஷன் போன்ற படைப்பு சார்ந்த வேலைகளில் செயற்கை நுண்ணறிவை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பது கற்றுத்தரப்படும். இதன் மூலம் படைப்பாளிகள் தங்களது வேலை நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, படைப்புகளின் தரத்தையும் பல மடங்கு உயர்த்த முடியும்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "இந்தியா ஏற்கனவே யூடியூப் போன்ற தளங்களில் உலகளவில் மிகப்பெரிய படைப்பாளர் சமூகத்தைக் கொண்டுள்ளது. இந்தப் புதிய ஏஐ பயிற்சி நமது இளைஞர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கதவுகளைத் திறக்கும். அவர்கள் சர்வதேச அளவிலான படைப்பாளர்களுடன் போட்டியிடும் திறனைப் பெறுவார்கள்" எனத் தெரிவித்தனர்.

இணையப் பாதுகாப்பும் இதில் முக்கியம்

படைப்பாளர்களின் தொழில்நுட்பத் திறனை வளர்ப்பது மட்டுமின்றி, இணையப் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை சார்ந்த விழிப்புணர்வும் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மத்திய அரசின் இந்த ஏஐ கல்வி உதவித்தொகை திட்டம், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் படைப்பாற்றல் துறையில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
RTE Admission 2026: தனியார் பள்ளியில் இலவச கல்வி- ஆர்டிஇ சேர்க்கை எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
RTE Admission 2026: தனியார் பள்ளியில் இலவச கல்வி- ஆர்டிஇ சேர்க்கை எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
உதவித்தொகை, வேலை உறுதி: ஐஐடி சென்னையில் எம்டெக், எம்எஸ்சி, எம்ஏ படிப்புகள்! விண்ணப்பிப்பது எப்படி?
உதவித்தொகை, வேலை உறுதி: ஐஐடி சென்னையில் எம்டெக், எம்எஸ்சி, எம்ஏ படிப்புகள்! விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD SILVER RATE Today: நேற்று அதிரடி, இன்று சரிவு.! ரூ.10,000 குறைந்தது.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன.?
நேற்று அதிரடி, இன்று சரிவு.! ரூ.10,000 குறைந்தது.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன.?
BJP Candidates: பாஜகவை பாடாய்படுத்தும் 6 தொகுதிகள் - அண்ணாமலைக்கு ரெண்டுல ஒன்னு கன்ஃபார்ம்? வானதி விடாப்பிடி
BJP Candidates: பாஜகவை பாடாய்படுத்தும் 6 தொகுதிகள் - அண்ணாமலைக்கு ரெண்டுல ஒன்னு கன்ஃபார்ம்? வானதி விடாப்பிடி
Iran Pezeshkian Vs Trump: எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஈரான் அதிபர்; அமெரிக்க மக்களுக்கு கடிதம்; பழிக்குப் பழி.!
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஈரான் அதிபர்; அமெரிக்க மக்களுக்கு கடிதம்; பழிக்குப் பழி.!
Car Sales FY 2026: 24 லட்சம் யூனிட்களை அள்ளிய மாருதி - ஹுண்டாய்க்கு டாடா காட்டிய மஹிந்த்ரா - SUV-க்களின் ஆதிக்கம்
Car Sales FY 2026: 24 லட்சம் யூனிட்களை அள்ளிய மாருதி - ஹுண்டாய்க்கு டாடா காட்டிய மஹிந்த்ரா - SUV-க்களின் ஆதிக்கம்
Artemis II: 50 ஆண்டுகளில் முதல்முறை..! நிலவிற்கு மனிதர்களை அனுப்பிய நாசா - ஆர்டெமிஸ் II செய்யப்போவது என்ன?
Artemis II: 50 ஆண்டுகளில் முதல்முறை..! நிலவிற்கு மனிதர்களை அனுப்பிய நாசா - ஆர்டெமிஸ் II செய்யப்போவது என்ன?
Trump Vs Iran: சும்மா அடிச்சு விடுங்க.! புதிய அதிபர் போர்நிறுத்தம் கேட்டதாக பதிவிட்ட ட்ரம்ப்; காறித்துப்பிய ஈரான்
சும்மா அடிச்சு விடுங்க.! புதிய அதிபர் போர்நிறுத்தம் கேட்டதாக பதிவிட்ட ட்ரம்ப்; காறித்துப்பிய ஈரான்
IPL 2026: மொத ரவுண்டிற்கே நாக்-அவுட் ஆன CSK - ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - டாப் 4 இடங்களில் எந்த அணிகள்?
IPL 2026: மொத ரவுண்டிற்கே நாக்-அவுட் ஆன CSK - ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - டாப் 4 இடங்களில் எந்த அணிகள்?
Range Rover: புதிய ரூல்ஸ்..! ரூ.1 கோடி வரை குறையும் ரேஞ்ச் ரோவர் கார்களின் விலை - எந்த மாடலுக்கு எவ்வளவு சேவிங்ஸ்?
Range Rover: புதிய ரூல்ஸ்..! ரூ.1 கோடி வரை குறையும் ரேஞ்ச் ரோவர் கார்களின் விலை - எந்த மாடலுக்கு எவ்வளவு சேவிங்ஸ்?
Embed widget