மேலும் அறிய

GATE 2025: பொறியியல் முதுகலைப் படிப்பு, அரசுப்பணி: கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி; எப்படி?

பொறியியல் 3ஆம் ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டுகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள், கேட் 2025ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் படிப்புகளுக்கான கேட் (Graduate Aptitude Test in Engineering) தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (செப். 26ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும். 

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்கள் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் மாணவர்களை அனுமதிக்க கேட்என்ற பெயரில் நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. இந்த நிலையில் ஐஐடி ரூர்க்கி, 2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் கேட் தேர்வை நடத்த உள்ளது. கணினி மூலம் நடைபெற உள்ள 2025 கேட் தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தேர்வு எப்போது?

முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் தேர்வு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும். அதேபோல பொதுத்துறை நிறுவனங்களில் அரசுப் பணிகளுக்கும் இந்தத் தேர்வு மதிப்பெண்கள் முக்கியமானதாக உள்ளது. 

விண்ணப்பிக்க நாளை கடைசி!

* கேட் தேர்வு 2025 பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  

* மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க நாளை (செப்டம்பர் 26ஆம் தேதி) கடைசித் தேதி. 

* அதே நேரத்தில் தாமதக் கட்டணத்தைச் செலுத்தி அக்டோபர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

* மார்ச் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

தேர்வு முறை எப்படி?

3 மணி நேரத்துக்கு 30 தாள்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்வர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில், தாள்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த மதிப்பெண்கள் செல்லுபடி ஆகும்.

எனினும் இதற்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. 1 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 1/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும். 2 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 2/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும்.   

விண்ணப்பிக்க தகுதி என்ன?

பொறியியல் 3ஆம் ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டுகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள், கேட் 2025ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

முந்தைய ஆண்டுகளின் கேட் தேர்வு வினாத்தாள்களை அறிய https://drive.google.com/drive/folders/1KIP49ld707wFmvWkQ2JeQU-ypwb2Pzpk என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களை https://gate2025.iitr.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.   

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!
ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம்: விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
Gold Silver Rate June 30th: காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Car Drive System: FWD, RWD, AWD, 4X4 - இதெல்லாம் என்னன்னு தெரியுமா.? ஒரு கார் வாங்குறதுக்கு முன்னாடி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
FWD, RWD, AWD, 4X4 - இதெல்லாம் என்னன்னு தெரியுமா.? ஒரு கார் வாங்குறதுக்கு முன்னாடி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
Pakistan Minister Warning: “கைகளை வெட்டுவோம்“; இந்தியாவிற்கு பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்.! எதற்காக தெரியுமா.?
“கைகளை வெட்டுவோம்“; இந்தியாவிற்கு பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்.! எதற்காக தெரியுமா.?
Updated Maruti Brezza: டர்போ எஞ்சின், ADAS உடன் அசத்த வரும் புதுப்பிக்கப்பட்ட மாருதி பிரெஸ்ஸா; விரைவில் லாஞ்ச்; ரெடியா.?
டர்போ எஞ்சின், ADAS உடன் அசத்த வரும் புதுப்பிக்கப்பட்ட மாருதி பிரெஸ்ஸா; விரைவில் லாஞ்ச்; ரெடியா.?
Embed widget