மேலும் அறிய

SSC Exam Free Training: 20 ஆயிரம் அரசுப்பணிகளுக்கு நாளை இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?- விவரம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு குறிப்பாக 20,000-க்கும்‌ மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு நாளை இலவசப் பயிற்சி வழங்க உள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு குறிப்பாக 20,000-க்கும்‌ மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு நாளை (அக்டோபர் 9ஆம் தேதி) இலவசப் பயிற்சி வழங்க உள்ளது. அரசு நடத்தும்‌ இப்பயிற்சி முகாமில்‌ போட்டித்‌ தேர்வுகளில்‌ ஆர்வமுள்ள இளைஞர்கள்‌ கலந்து‌ கொள்ளலாம்‌. இந்நிகழ்ச்சி முழுவதுமாக இணைய தளத்திலும்‌, அரசு கேபிள்‌ டிவியிலும்‌ நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்‌.

மத்திய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ (Staff Selection Commission) ஆண்டுதோறும்‌ மத்திய அரசின்‌ துறைகளுக்கு தகுதிவாய்ந்த பணியாளர்களை பிரிவு பி மற்றும்‌ சி பணிகளுக்கு போட்டித்‌ தேர்வுகள்‌ நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20,000-க்கும்‌ மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான பி பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல்‌ 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள்‌ Combined Graduate Level Examination (CGLE) போட்டித்‌ தேர்வு மூலம்‌ தேர்ந்தெடுக்கப்படுவார்கள்‌. இவற்றில்‌ உதவி பிரிவு அலுவலர்‌ (Assistant Section Officer) பணியிடங்கள் ‌மத்திய அரசின்‌ தலைமைச்‌ செயலகம்‌, மத்திய புலனாய்வுத்‌ துறை, ரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்‌ துறை, தலைமை அலுவலகம்‌ ஆகியவற்றிற்கும்‌, ஆய்வாளர்‌ பணியிடங்கள்‌, மத்திய  அரசின்‌ வருவாய்‌ துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றிலும்‌ மற்றும்‌ உதவியாளர்‌,
கண்காணிப்பாளர்‌ பணியிடங்கள்‌ மத்திய அரசின்‌ அனைத்துத்‌ துறைகளுக்கும்‌ தேர்ந்தெடுக்கப்படுவார்கள்‌.

மேலும்‌ சி பிரிவு பணிகள்‌ 12ஆம்‌ வகுப்பு முடித்த 18 முதல்‌ 27 வயதிற்குட்பட்ட இளைஞர்கள்‌ Combined Higher Secondary Level (CHSL) தேர்வு மூலம்‌ மத்திய அரசின்‌ அனைத்துத்‌ துறைகளுக்கும்‌ இளநிலை உதவியாளர்‌ மற்றும்‌ உதவியாளர்‌ பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்‌.

மேலும்‌, இப்பொதுப்பணிகள்‌ தவிர Junior Engineer தேர்வு, Stenographer தேர்வு, Sub Inspector in Delhi Police, Central Armed Police Force (CAPF) மற்றும் Central Industrial Security Force  தேர்வுகளும்‌ ஆண்டுதோறும்‌ நடைபெறுகிறது.

மேற்கண்ட தேர்வுகளுக்கு நிலை 1-ல்‌ பொதுவான போட்டித்‌ தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension பிரிவுகளில் இருந்துதான்‌ வினாக்கள்‌ கேட்கப்படுகிறது. நிலை 2-ல்‌ Mathematics Abilities, Reasoning and General Intelligence, English, General Awareness and Computer Knowledge பாடப் பிரிவுகளிலிருந்தும்‌ General studies பாடப் பிரிவுகளிலிருந்தும்‌ வினாக்கள்‌ கேட்கப்படுகிறது. 


SSC Exam Free Training: 20 ஆயிரம் அரசுப்பணிகளுக்கு நாளை இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?- விவரம்

எனவே தமிழ்நாடு மாணவர்கள்‌ மத்திய அரசின்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ போட்டித்‌ தேர்வுகளில்‌ பெருமளவு பங்கேற்று வெற்றி பெற வேண்டும்‌ என்ற நோக்கில்‌, மனிதவள மேலாண்மைத்‌ துறை மற்றும்‌ தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ ஆகிய துறைகள்‌ இணைந்து, இத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும்‌ அனுபவம்‌ மிக்க வல்லுநர்களை கொண்டு, ஒரு நாள்‌ கருத்தரங்கம்‌ வரும்‌ ஞாயிற்றுக்கிழமை 09.10.2022 அன்று சென்னை, கோட்டூர்புத்தில்‌ அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்‌ அரங்கில்‌ காலை 10.00 மணி முதல்‌ நடைபெறும்‌.

அரசு நடத்தும்‌ இப்பயிற்சி முகாமில்‌ போட்டித்‌ தேர்வுகளில்‌ ஆர்வமுள்ள இளைஞர்கள்‌ கலந்து‌ கொள்ளலாம்‌. நேரில்‌ வர இயலாத மாணவர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ இந்நிகழ்ச்சி முழுவதுமாக இணையதளத்திலும்‌, அரசு கேபிள்‌ டிவியிலும்‌ நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்‌ மற்றும்‌ சமூக ஊடகங்களிலும்‌ பதிவேற்றப்பட உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
Embed widget