மேலும் அறிய

Free Breakfast Scheme: காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?- சென்னை மாநகராட்சி முடிவை திரும்பப்பெறுக-அன்புமணி

மாணவர்களின் நலன் சார்ந்த இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதற்கு மாறாக, தனியாரிடம் ஒப்படைத்து விட்டு மாநகராட்சி ஒதுங்கிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சி முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

''சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலன் சார்ந்த இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதற்கு மாறாக, தனியாரிடம் ஒப்படைத்து விட்டு மாநகராட்சி ஒதுங்கிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.  மாநகராட்சியின் முடிவு கண்டிக்கத்தக்கது.

தனியாரே நலம் பெறுவார்கள்

அமாநகராட்சியின் 358 பள்ளிகளில் பயிலும் 65,000 மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை மாநகராட்சி மூலமாக செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. அவ்வாறு செயல்படுத்துவதற்கு மாறாக இந்தத் திட்டத்தை தனியாரிடம் வழங்கி அதற்கு ரூ.19 கோடியை தாரை வார்ப்பது நியாயமல்ல. இதனால் பள்ளி மாணவர்களை விட தனியாரே நலம் பெறுவார்கள்.

தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து, அதற்கான சோதனை முயற்சியாக சென்னையில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை கடந்த ஆட்சியிலேயே காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அட்சய பாத்திரம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு மாநகராட்சியோ, அரசோ அந்த நிறுவனத்திற்கு நேரடியாக எந்த நிதியும் வழங்கவில்லை.

அதிமுக அரசுக்கும்,  திமுக அரசுக்கும் என்ன வித்தியாசம்?

அதேநேரத்தில் ஆளுனர் மாளிகை மூலமாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன் காரணமாகத் தான் காலை உணவுத் திட்டத்தை அரசே நடத்தும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  ஆனால், இப்போது அதே திட்டத்தை ரூ.19 கோடியை தனியாருக்கு கொடுத்து செயல்படுத்தச் சொல்வதான் நோக்கம் என்ன? அதிமுக அரசின் செயலுக்கும்,  திமுக அரசின் செயலுக்கும் என்ன வித்தியாசம்?

இவை அனைத்தையும் கடந்து, தனியாருக்கு வழங்கப்படவுள்ள நிதியைக் கொண்டு இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதில் என்ன சிக்கல்? தனியாரால் நடத்தப்பட வேண்டிய மது வணிகத்தை தமிழக அரசு விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசே செய்ய வேண்டிய கல்வி சேவையையும் உணவு வினியோகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கின்றது. இதுவா மக்கள்நல அரசுக்கு அடையாளம்?

மாணவர்களின் நலன் சார்ந்த காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்படக் கூடாது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் தீர்மானம் திரும்பப்பெறப்பட வேண்டும். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாநகராட்சி மூலமாகவே உணவு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget