மேலும் அறிய

அக்டோபர் 10ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்வு

இன்ஜினியரிங் 2வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கியது. அக்டோபர் 10ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக நடைபெற உள்ளது

இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 10ம் தேதி தொடங்கியது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வுக்கான அனைத்து நடைமுறைகளும் நேற்று காலையுடன் நிறைவு பெற்றது. அந்த வகையில் முதல் சுற்று கலந்தாய்வில் 13 ஆயிரத்து 893 விண்ணப்பதாரர்கள் விருப்ப இடங்களை தேர்வு செய்து இருந்தனர். அவர்களில் 12 ஆயிரத்து 996 பேருக்கு தற்காலிக இடஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.
 
அதில் 5 ஆயிரத்து 887 பேர் இடங்களை உறுதி செய்து கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். மேலும் 3 ஆயிரத்து 707 பேர் முதன்மை விருப்ப இடங்கள் கிடைக்கும் பட்சத்தில் ஏற்கனவே தேர்வு செய்திருந்த இடங்களில் இருந்து முன்னேறுவதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உறுதி செய்திருந்த இடத்துக்கான கட்டணத்தை செலுத்தி இருக்க வேண்டும். அந்த வகையில் 3 ஆயிரத்து 707 பேரில், 3 ஆயிரத்து 46 பேருக்கு அவர்களின் முதன்மை விருப்ப இடங்களில் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு முடிவில், 9 ஆயிரத்து 594 மாணவ-மாணவிகள் தமிழகம் முழுவதும் உள்ள 446 இன்ஜினியரிங் கல்லூரிகளில் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்வு செய்து சேர்ந்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 2வது சுற்று கலந்தாய்வு இன்று காலையில் இருந்து தொடங்கி இருக்கிறது. அக்டோபர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.
 
முதல் சுற்று கலந்தாய்வை போலவே, இந்த சுற்றிலும் விருப்ப இடங்களை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல், முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருத்தல், இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. 2வது சுற்று கலந்தாய்வுக்கு சுமார் 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆன்லைனில் இருந்தபடியே இந்த கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்யலாம்.
 
தலைப்பு செய்திகள்

20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Embed widget