Dussehra Holidays 2025: 5 நாட்கள் தொடர் விடுமுறையா? அக்டோபர் 3 லீவ் அறிவிப்பு? வெளியான தகவல்
Saraswathi Ayudha Pooja Holidays 2025: அக்டோபர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, அதற்கு அடுத்த நாளான வியாழக்கிழமை (அக்டோபர் 3) விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் வைரலான நிலையில், அதில் உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (அக்டோபர் 1) ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து நாளை மறுநாள் (அக்டோபர் 2) சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டால்
பள்ளிகளுக்கு ஏற்கெனவே காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டால், மீண்டும் அக்டோபர் 6ஆம் தேதி அன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் கேட்டிருந்தனர்.
5 நாட்கள் தொடர் விடுமுறை
இந்த நிலையில் கோரிக்கைகளை ஏற்று, தமிழக அரசு விடுமுறை அறிவித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அக்டோபர் 3 விடுமுறை காரணமாக, அடுத்து வரும் சனி, ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை என்பதால், 5 நாட்கள் தொடர் விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும் இதுகுறித்து விசாரித்த வரையில், தமிழக அரசுத் தரப்பில் விடுமுறை எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.






















