மேலும் அறிய

பள்ளிக் கல்வித் துறையில் அதிரடி மாற்றம்! முக்கிய கல்வி அதிகாரிகள் இடமாற்றம், பதவி உயர்வு - முழு விவரம்!

2025-2026 ஆம் ஆண்டிற்கான முறையான தேர்ந்தோர் பெயர் பட்டியல், அரசாணையின்படி அரசளவில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிட மாறுதல், பதவி உயர்வு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அதுதொடர்பான அரசாணைகளும் வெளியாகி உள்ளன. 

தமிழ்நாடு பள்ளிக்கல்வியின் கீழ் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களுக்கான 2025-2026 ஆம் ஆண்டிற்கான முறையான தேர்ந்தோர் பெயர் பட்டியல், அரசாணையின்படி அரசளவில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

26 அலுவலர்களுக்கு பதவி உயர்வு

இதன் தொடர்ச்சியாக முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் 11 அலுவலர்களுக்கு பணி மாறுதல் வழங்கியும், தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி விதிகளில் வகுப்பு IV இன் கீழ் உள்ள மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் 26 அலுவலர்களுக்கு பதவி உயர்வளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணியில் வகுப்பு III ஐ சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்/ துணை இயக்குநர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு உள்ளது.

கூடுதல் பொறுப்பு அலுவலர்

 இவ்வகையில் மாறுதல் வழங்கப்பட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர்கள், தமது பொறுப்புகளை மூத்த மாவட்டக்கல்வி அலுவலரிடத்தில் ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் பணியில் சேரவேண்டும். முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவலர்களால் நியமனம் செய்யப்படும் கூடுதல் பொறுப்பு அலுவலரிடம் தங்களது பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் பதவி உயர்வு பெற்றுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் புதிய பணியிடத்தில் பணியில் சேர ஏதுவாக, கூடுதல் பொறுப்பு அலுவலராக மாவட்டத்தில் அரசு பணிபுரியும் உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களில் பணியில் மூத்தவரை தமது அளவிலேயே நியமனம் செய்து ஆணை வழங்கிவிட்டு விவரம் தெரிவிக்கும்படியும் தொடர்புடைய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

காலியாக இருந்த முதன்மைக் கல்வி அலுவலர் இடங்கள்           

மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் என்பது முக்கியமான ஒன்று. சுமார் ஓராண்டாக கிருஷ்ணகிரியிலும், ஆறு மாதங்களுக்கு மேலாக தேனி, திருப்பூர், தஞ்சை, மயிலாடுதுறையிலும், சில மாதங்களுக்கும் மேலாக நாகப்பட்டினம், நீலகிரி, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய இடங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த நிலையில் இந்த பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலமாக, பணியிடங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன.

முன்னதாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள், தேர்வு முடிவுகளுக்கான அறிவிப்புகளும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் என்னதான் குளறுபடி? மென்பொருள் நிறுவனம் விளக்கம்
CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் என்னதான் குளறுபடி? மென்பொருள் நிறுவனம் விளக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!
புதுச்சேரி சென்டாக்: 'நீட்' அல்லாத படிப்புகளுக்கான வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு!
புதுச்சேரி சென்டாக்: 'நீட்' அல்லாத படிப்புகளுக்கான வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekedatu Dam Resolution : சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- நாளை சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- நாளை சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
C Mahendran CPI: தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
Kovai Neet Student : நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?
நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?"
TAMILNADU RAIN ALERT : அடுத்த 2 மணி நேரம்.! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.? வெதர்மேன் அலர்ட்
அடுத்த 2 மணி நேரம் .! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.?
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
Embed widget