மேலும் அறிய

CUET 2022 Mock Test: க்யூட் நுழைவுத் தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிட்ட என்டிஏ; பெறுவது எப்படி?

க்யூட் இளநிலை நுழைவுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதைப் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். 

க்யூட் இளநிலை நுழைவுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதைப் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். 

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். 
இதுவரை சுமார் 12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி ஆகும். 

13 மொழிகளில் தேர்வு

இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. ஜூலை மாதத்தில் இந்தத் தேர்வு நடைபெறும். 

குறிப்பாக 15.07.2022, 16.07.2022, 19.07.2022, 20.07.2022 மற்றும் 04.08.2022, 05.08.2022, 06.08.2022, 07.08.2022, 08.08.2022, 10.08.2022 ஆகிய தேதிகளில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுகள் காரணமாக இடையில் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

3 பிரிவுகளாகக் கேள்விகள்

பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் 3 பிரிவுகளாகக் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி கட்டாய மொழித் தேர்வாக இருக்கும். தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொழி சார்ந்து வாசிப்புத் திறன், சொல்லகராதி சார்ந்த கேள்விகள், அருஞ்சொல், எதிர்ச்சொல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படும். 

இரண்டாவது பகுதியில் கூடுதலாக விருப்ப மொழித் தேர்வையும் தேர்வர்கள் எழுதலாம். ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி, நேபாளி, பெர்ஷியன், இத்தாலியன், அரபி, சிந்தி, காஷ்மீரி, கொங்கணி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தலி, திபெத்தியன், ஜப்பான், ரஷ்யன், சீனம் ஆகிய 19 மொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம். 

2ஆவது பிரிவில் தேர்வர்களின் துறை சார் அறிவு சோதிக்கப்படும். மொத்தமுள்ள 27 துறைகளில் இருந்து தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு தேர்வர் 6 துறைகள் வரை தேர்வு செய்ய முடியும். பல்கலைக்கழகங்களும் துறைசார் தேர்வுகளை நடத்த முடிவு செய்யலாம்.

இதற்கு மாணவர்கள் ஜூன் 26 வரை https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதேபோல விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளவும் இன்று கடைசித் தேதி ஆகும். 


CUET 2022 Mock Test: க்யூட் நுழைவுத் தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிட்ட என்டிஏ; பெறுவது எப்படி?

இந்த நிலையில், க்யூட் இளநிலை நுழைவுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதைப் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். 

முதலில், மாதிரி வினாத்தாள்களைக் காண: https://cdnasb.samarth.ac.in/site/PUBLIC_NOTICE_Display_of_MPQs_+for_CUET_UG-2022-25-June-2022.pdf என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து பார்க்க வேண்டும். 

இந்த கேள்விகள் அனைத்தும் தேர்வர்களுக்குப் பயிற்சி அளிக்க மட்டுமே. இவற்றில் இருந்து நுழைவுத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என்று உறுதி அளிக்க முடியாது. 

பாடங்கள், மொழிப் பாடங்கள், பொது அறிவு என 3 பகுதிகளில் இருந்துமே மாதிரிக் கேள்விகள் இருக்கும். இதை ஆன்லைனிலேயே மாணவர்கள் பார்த்து, பயிற்சியை மேற்கொள்ளலாம். 

அடுத்தடுத்த தகவல்களுக்குத் தேர்வர்கள், என்டிஏ இணையதளமான https://cuet.samarth.ac.in என்ற முகவரியைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"அரசாங்கமாவது, விதியாவது!" - தனியார் பள்ளி முதல்வர் ஆவேச பேச்சு; சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த RTE கட்டணக் கொள்ளை!
சிவகங்கை: பிரதமர் தேசிய தொழிற்பழகுநர் முகாம் – ஜூன் 10 அன்று தொழிற்பழகுநர் பயிற்சி மேளா !
சிவகங்கை: பிரதமர் தேசிய தொழிற்பழகுநர் முகாம் – ஜூன் 10 அன்று தொழிற்பழகுநர் பயிற்சி மேளா !
JEE Advanced: ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வரலாற்று சாதனை:  10 ஆயிரம்+ மாணவிகள் தேர்ச்சி!
JEE Advanced: ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வரலாற்று சாதனை:  10 ஆயிரம்+ மாணவிகள் தேர்ச்சி!
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
CPI Mutharasan : தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
Honda Discounts: ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?
ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?
TNEB CM Vijay : ஒரே நாளில் அதிரடி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
ஒரே நாளில் அதிரடி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
Vanni Arasu criticized Annamalai : மரு வைத்த மாறுவேடத்தில் அண்ணாமலை.! கொண்டையை மறைங்க Bro- இறங்கி அடிக்கும் வன்னி அரசு
மரு வைத்த மாறுவேடத்தில் அண்ணாமலை.! கொண்டையை மறைங்க Bro- இறங்கி அடிக்கும் வன்னி அரசு
Embed widget