மேலும் அறிய

மாணவர்களின் கைகளில் காலநிலை மாற்றம்: பள்ளிகளில் மரக்கன்று நடும் இயக்கம்! பசுமைப் புரட்சிக்கு தயாராகுங்கள்!

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்றுகள் நட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

காலநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்களிடம் இருந்து தொடங்கும் பொது விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில், SDG-13 மற்றும் Mission LIFE (Lifestyle for Environment) இயக்கத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இது மாணவர்கள் இயற்கையை நேசிக்கும் நெறியில் பயணிக்க ஒரு சிறந்த வழியாக அமையும். ஒவ்வொரு மாணவனும்/ மாணவியும் பசுமையைப் பேணும் ஒரு செயலில் நேரடியாக பங்கேற்கும் வகையில், கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுகின்றன:

முக்கிய நடவடிக்கைகள்

ஒவ்வொரு மாணவரும் பள்ளி, வீடு அல்லது உள்ளூர் சுற்றுச்சூழலில் ஒரு மரக்கன்றை நட்டிட வேண்டும். மரக்கன்றுடன் தாயார் அல்லது பாதுகாவலருடன் எடுத்த புகைப்படம் தயாரிக்க வேண்டும். அந்த புகைப்படம் Eco Clubs for Mission LiFE இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.

பள்ளி நிலை செயலாக்கம்

ஒவ்வொரு பள்ளியிலும் பசுமை இயக்கக் குழு பொறுப்பாசிரியர், மாணவர் தூதர்கள், மற்றும் குழு மாணவர் தலைவர்கள் (House Captains) திட்டமிட்டு இந்த நடவடிக்கையை ஒருங்கிணைக்க வேண்டும்.

மகிழ்முற்றம் மாணவர் குழுக்கள் (House System) அடிப்படையில் போட்டித் தன்மை உருவாக்கி, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் பங்கேற்புக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இது மாணவர்களின் ஆர்வமுள்ள பங்கேற்பை ஊக்குவிக்கும்.

மாவட்ட மற்றும் வட்ட அளவிலான ஒருங்கிணைவு

தங்களது மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (DEOs) (இடைநிலை/ தொடக்கப்பள்ளி/ தனியார் பள்ளி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEOs) உடன் உடனடியாக கூட்டம் நடத்தி, இந்நிகழ்வின் நோக்கமும், அவசியமும் குறித்து விவாதிக்க வேண்டும்.

DEOs மற்றும் BEOs, தங்களது எல்லைகளுக்குள் உள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுடன் கூட்டம் நடத்தி. மரக்கன்று நடுதல் இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும். இந்நிகழ்வு ஒரே நாளில் (One-Day Drive) ஒவ்வொரு வட்டத்திலும் 10-09-2025க்குள் ஏற்ற நாளில் செயல்படுத்தப்பட வேண்டும்.

மாவட்ட பசுமை இயக்க ஒருங்கிணையாளர்கள் மற்றும் தேசிய பசுமை படை (NGC) ஒருங்கிணையாளர்களின் பங்கு:

வனத்துறையுடன் இணைந்து தேவையான மரக்கன்றுகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளூர் தன்னார்வ அமைப்புகள் (NGOs) உடன் இணைந்து செயல்திறனான ஆதரவைப் பெற வேண்டும்.

மாணவர்கள் புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர் ஒவ்வொருவருக்கும் இயற்கைக்கு செய்த பசுமை பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், தமிழில் மின் சான்றிதழ்கள் (e-certificates) உருவாக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தங்களின் சிறப்பான ஒருங்கிணைப்பும், தலைமையிலும் இந்த மரக்கன்று நடுதல் இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். நாம் வளர்க்கும் ஒவ்வொரு மரமும், மாணவர்களின் உள்ளத்தில் ஒரு பசுமை எண்ணத்தை விதைக்கும் என்பதால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கூறி உள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget