மேலும் அறிய

CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?

CBSE New Syllabus 2026-27: சிபிஎஸ்இ அடுத்த கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் வெளியீடு: 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! புதிய கற்றல் முறை!

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், வரவிருக்கும் 2026-27 கல்வியாண்டுக்கான புதிய பாடத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக இந்த பாடத்திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சிபிஎஸ்இ-ன் கல்வி சார்ந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக கல்வியாண்டு தொடங்கும்போது வெளியிடப்படும் பாடத்திட்டம், இம்முறை பள்ளி நிர்வாகங்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் முன்கூட்டியே தங்களது கற்றல் செயல்முறையைத் திட்டமிட வசதியாக முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள் என்னென்ன?

தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், மாணவர்களின் மனப்பாடம் செய்யும் முறையை மாற்றி, செய்முறை மற்றும் செயல்முறை கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொழிப் பாடங்கள், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்கள் மற்றும் விருப்பப் பாடங்களுக்கான (Electives) முழுமையான வரைமுறை இதில் இடம்பெற்றுள்ளது.

மேலும், உள்மதிப்பீட்டு மதிப்பெண்கள் (Internal Assessments) மற்றும் எழுத்துத் தேர்வுகளுக்கான மதிப்பெண் பகிர்வு குறித்த தெளிவான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?

  1. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதலில் cbseacademic.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

  2. முகப்புப் பக்கத்தில் உள்ள 'Curriculum' என்ற பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.

  3. அதில், 'Curriculum for the Academic Year 2026-27' என்பதை க்ளிக் செய்தால், 'Secondary' (9 மற்றும் 10-ம் வகுப்பு) மற்றும் 'Senior Secondary' (11 மற்றும் 12-ம் வகுப்பு) என இரண்டு பிரிவுகள் தோன்றும்.

  4. இதில் தங்களுக்குத் தேவையான வகுப்பைத் தேர்ந்தெடுத்து, பாடவாரியான விவரங்களை பிடிஎஃப் (PDF) வடிவில் எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  5. அல்லது https://cbseacademic.nic.in/curriculum_2027.html  என்ற இணைப்பை நேரடியாக க்ளிக் செய்தும் பாடத்திட்டத்தைப் பெறலாம்.  

ஒவ்வொரு பாடத்திட்டத்திலும்

மொழிகள் ( Languages - (Group-L) )

முதன்மைப் பாடங்கள் - Main Subjects - (Group-A1)

பிற விருப்பப் பாடங்கள் - Other Academic Electives -(Group-A2)

உள் மதிப்பீட்டு பாடங்கள் - Subjects of Internal Assessment ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளன. 

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் இப்போதிருந்தே தங்களது தயாரிப்புகளைத் தொடங்க இந்த அறிவிப்பு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

2026–27 முதுகலை மாணவர் சேர்க்கை: காரைக்கால் அரசு கல்லூரி முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2026–27 முதுகலை மாணவர் சேர்க்கை: காரைக்கால் அரசு கல்லூரி முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
 
 "வெளிநாட்டுப் பட்டம்" என்ற போலி கௌரவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்திய மாணவர்கள்!
உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
Trump Vs Iran: ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
Punch EV Real World Milage: பஞ்ச் EV 468 கி.மீ மைலேஜ் தரும் என கூறும் டாடா.! நிஜத்தில் எவ்வளவு தூரம் செல்லும்.? சோதனை முடிவு இதோ
பஞ்ச் EV 468 கி.மீ மைலேஜ் தரும் என கூறும் டாடா.! நிஜத்தில் எவ்வளவு தூரம் செல்லும்.? சோதனை முடிவு இதோ
Trump about Hormuz: “ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
“ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
iPhone Air Vs Galaxy S25 Edge: ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
Embed widget