மேலும் அறிய

CBSE Admit Card 2024: வெளியான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்- பெறுவது எப்படி?

CBSE Board Exams 2024 Admit Card: சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளன.

சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளன. அதைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். 

10 ,12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி அன்று ஒரே நாளில் தொடங்குகின்றன. எனினும் 10ஆம் வகுப்புக்கு மார்ச் 13 அன்று தேர்வு முடியும் நிலையில், 12ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 2ஆம் தேதி தேர்வுகள் முடிகின்றன. தேர்வுகள் காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மற்றும் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை

  • பிப்ரவரி 15 - தொழில்முனைவோர்
  • பிப்ரவரி 16 -பேங்க்கிங்
  • பிப்ரவரி 19 -இந்தி
  • பிப்ரவரி 22- ஆங்கிலம்
  • பிப்ரவரி 27 -வேதியியல்
  • பிப்ரவரி 29 -புவியியல்
  • மார்ச் 4 -இயற்பியல்
  • மார்ச் 9- கணிதம்
  • மார்ச் 12- உடற்கல்வி
  • மார்ச் 15- உளவியல்
  • மார்ச் 18- பொருளாதாரம்
  • மார்ச் 19 -உயிரியல்
  • மார்ச் 22 -அரசியல் அறிவியல்
  • மார்ச் 23- கணக்கியல்
  • மார்ச் 27 -வணிக ஆய்வுகள்
  • மார்ச் 28 -வரலாறு
  • ஏப்ரல் 2- தகவல் தொழில்நுட்பம்

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது?

  • பிப்ரவரி 15 – ஓவியம் உள்ளிட்ட தேர்வுகள்
  • பிப்ரவரி 19 – சமஸ்கிருதம் உள்ளிட்ட தேர்வுகள்
  • பிப்ரவரி 20- தமிழ் உள்ளிட்ட தேர்வுகள்
  • பிப்ரவரி 21 - இந்தி
  • பிப்ரவரி 26 –ஆங்கிலம்
  • மார்ச் 2 -அறிவியல்
  • மார்ச் 4 – வீட்டு அறிவியல்
  • மார்ச் 7 - சமூக அறிவியல்
  • மார்ச் 11 - கணிதம்
  • மார்ச் 13 - தகவல் தொழில்நுட்பம்
     
 ஹால் டிக்கெட் எப்போது?

பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று காணலாம்.

https://www.cbse.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* 2024ஆம் ஆண்டுக்கான 10, 12ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் என்ற தெரிவைத் தேர்வு செய்யவும்.

* பதிவு எண், கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளிட்டு, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

* அல்லது https://cbseit.in/cbse/web/regn/login.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்து சென்றும், ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.

* இதில் பெயர், பதிவு எண், தேர்வு செய்யப்பட்ட பாடங்கள் தேர்வு மையங்கள், தேர்வு code, தேர்வு தேதிகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

கையெழுத்து கட்டாயம்

மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு, அதில் முதல்வரிடம் கையெழுத்து பெற வேண்டும். கையெழுத்து இடப்படாத ஹால் டிக்கெட்டுக்கு அனுமதி இல்லை. அத்தகைய ஹால் டிக்கெட்டை வைத்திருக்கும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கும் தனித் தேர்வர்களுக்கும் ஒரே நேரத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் மன நலன் கருதி இந்த ஆண்டு முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அறிவிக்கப்படாது என்று ஏற்கெனவே சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

கூடுதல் விவரங்களை அறிய: https://cbseacademic.nic.in/index.html- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

முழு தகவல்களுக்கு: https://www.cbse.gov.in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget