CAT 2024: நாளையே கடைசி; முதுநிலை மேலாண்மை படிப்புகளுக்கு கேட் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?
CAT 2024 Registration: ஆண்டுதோறும் இந்த முதுநிலை மேலாண்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு நவம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
![CAT 2024: நாளையே கடைசி; முதுநிலை மேலாண்மை படிப்புகளுக்கு கேட் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி? CAT Exam Common Admission Test 2024 IIM tomorrow is the last date to apply know in detail CAT 2024: நாளையே கடைசி; முதுநிலை மேலாண்மை படிப்புகளுக்கு கேட் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/12/e035c515a290d685aacf12477075fcea1726115366421140_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முதுநிலை மேலாண்மை படிப்புகளுக்கு நடத்தப்படும் கேட் (CAT) தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (செப்.13) கடைசித் தேதி ஆகும்.
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.எம்.கள் மற்றும் பிசினஸ் பள்ளிகளில் முதுநிலை மேலாண்மைப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐஐஎம் அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிபூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சி, உதய்பூர், விசாகப்பட்டிணம் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு கேட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதும் பொது நுழைவுத் தேர்வாக கேட் (CAT) தேர்வு உள்ளது. ஆண்டுதோறும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு நவம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான சி.ஜி.பி.ஏ.வைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் இட ஒதுக்கீட்டின்கீழ் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
3 கட்டங்களாகத் தேர்வு
இந்த ஆண்டு ஐஐஎம் கல்கத்தா கேட் தேர்வை நடத்துகிறது. பொது நுழைவுத் தேர்வு தேர்வு 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை முதல்கட்டத் தேர்வும் 2ஆவது கட்டத் தேர்வு 12.30 முதல் 2.30 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
பர்சன்ட்டைலாக மாற்றப்படும்
3 அமர்வுகளுக்குப் பிறகு தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் நார்மலைஸ் ஆக்கப்படும். பிறகு அவை பர்சன்ட்டைலாக மாற்றப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் எவ்வளவு?
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு - ரூ.1,250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிற அனைத்துத் தேர்வர்களுக்கும் - ரூ.2500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/32842/89884/Registration.html என்ற இணைப்பை க்ளிக் செய்து கொள்ளவும்.
- போதிய தகவல்களை உள்ளிட்டு முன்பதிவு செய்ய வேண்டும்.
- தொடர்ந்து https://cdn.digialm.com/EForms/configuredHtml/32842/89884/login.html என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://cdn.digialm.com/per/g06/pub/32842/EForms/CAT24/CAT_2024_Information_Bulletin.pdf
முழு விவரங்களை அறிய: https://iimcat.ac.in/
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)