மேலும் அறிய

Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்

கல்வித் துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, ஆசிரியர்களுக்குக் கிளாட் ஏஐ-ன் மேம்பட்ட தொழில்நுட்ப மாடல்கள் எவ்விதக் கட்டணமுமின்றி வழங்கப்படுகின்றன.

ஆசிரியர்களுக்கு இலவச கிளாட் ஏஐ சேவையை ஆந்த்ரோபிக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள் என்ற விவரங்களை காணலாம்.

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் பயன்பாட்டிற்காகத் தனது கிளாட் ஏஐ (Claude AI) சேவையை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது.

வகுப்பறை கற்பித்தலை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் அன்றாடப் பணிச்சுமையைக் குறைக்கவும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

இலவச பயன்பாடு 

கல்வித் துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, ஆசிரியர்களுக்குக் கிளாட் ஏஐ-ன் மேம்பட்ட தொழில்நுட்ப மாடல்கள் எவ்விதக் கட்டணமுமின்றி வழங்கப்படுகின்றன.

இந்த ஏஐ கருவியைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் புதிய பாடத்திட்டங்களை உருவாக்குதல், மாணவர்களுக்கான வினாத்தாள்களைத் தயாரித்தல், சிக்கலான கருத்துகளை மாணவர்களுக்கு எளிமையாக விளக்குதல் மற்றும் தேர்வு மதிப்பீட்டு முறைகளை வடிவமைத்தல் போன்ற பணிகளை மிக விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள முடியும்.

யாரெல்லாம் பெற முடியும்? என்ன தகுதி?

இந்த இலவசச் சேவை சாதாரண பயனர்களுக்குக் கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே இதைப் பெற முடியும். இதற்கு, கல்வி நிறுவனங்களால் ஆசிரியர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியைக் (.edu or school domains) கொண்டு கணக்கைத் தொடங்குவது கட்டாயமாகும்.

தரவுப் பாதுகாப்பு

கல்வித்துறையில் தரவுப் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால், ஆசிரியர்கள் உள்ளிடும் எந்தவொரு தகவலும் அல்லது தரவுகளும் தங்களின் ஏஐ மாடலுக்குப் பயிற்சியளிக்க எக்காரணம் கொண்டும் பயன்படுத்தப்பட மாட்டாது என ஆந்த்ரோபிக் நிறுவனம் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளது.

தகுதியுடைய கல்வியாளர்கள் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று, தங்களின் கல்வி நிறுவன மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி இந்த இலவச ஏஐ சேவையை உடனடியாகப் பெறலாம்.

இதற்கு முதலில் https://claude.com/solutions/teachers என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
Embed widget