மேலும் அறிய

''நீட் நாடகத்தை நிறுத்திட்டு மாணவர்களை நிம்மதியா படிக்க விடுங்க''- முதல்வரிடம் ஆவேசமான அண்ணாமலை!

தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டிருக்கிறது திமுக.- அண்ணாமலை.

நீட் தேர்வு பற்றி தமிழக பாஜக கேட்டிருந்த பல கேள்விகளுக்கு, திமுக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை என்று சாடியுள்ள பாஜக மாநிலத் தலைவர், இதுதொடர்பாக முதல்வரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

''நீட் தேர்வு வந்த பிறகே, தமிழகத்தில் சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும், மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். ஆனால், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டிருக்கிறது திமுக.

பொதுமக்களை ஏமாற்றும் முதல்வர்

திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தாங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் எப்படி பணம் விளையாடுகிறது என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், இன்னும் நீட் எதிர்ப்பு என்று பல நாடகங்கள் நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அப்படி ஒரு நாடகமான இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழக பாஜக பங்கேற்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பாக, தமிழக மக்கள் சார்பில், தமிழக பாஜக கேட்டிருந்த பல கேள்விகளுக்கு, திமுக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விகளை மீண்டும் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைக்க விரும்புகிறேன்.

ஏன் நீதிமன்றம் செல்லவில்லை?

நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்தியது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக அரசுக்கு எண்ணம் இருக்குமேயானால், நீங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். டாஸ்மாக் ஊழல் விசாரணைக்குத் தடை கேட்டும், கள்ளச்சாராய மரணம் குறித்த விசாரணையைத் தடுக்கவும் நீதிமன்றம் செல்லும் உங்கள் அரசு, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்?

நீட் தேர்வு குறித்து திமுக கூறுவது உண்மை நிலவரத்துக்கு நேர்மாறாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஆதாரங்களையும் இதுவரை முன்வைத்திருக்கிறீர்கள்? நீட் தேர்வு வந்த பிறகே, மருத்துவக் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நீட் தேர்வினால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு என்று பொய் சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில், நீட் தேர்வு இல்லாத, 2007 - 2016 காலகட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 38 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே, மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றனர் என்ற உண்மையை மறைப்பது ஏன்?

மறைத்தது ஏன்?

அறிவாலயத்தில் இருந்து தயார் செய்து கொடுத்த முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில், நீட் தேர்வுக்கு முன்பாக, கடந்த 2010 - 2014 ஆண்டுகளில், மருத்துவக் கல்வியில் சேர்ந்த தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை என்ன என்பதை ஏன் குறிப்பிடவில்லை? நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2024 நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் 8 பேர், தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்கள்.

தமிழகத் தேர்ச்சி விகிதம், தேசிய சராசரியை விட அதிகம் என்பது முதலமைச்சருக்குத் தெரியாதா? யாரை ஏமாற்ற இன்னும் நீட் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்? ஒவ்வொரு மாவட்டம்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நோக்கத்தோடு, நமது பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்தில் 14 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்வி இடங்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் மேலும் பல மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரத்தைப் பராமரிக்காமல், புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து என்ற நிலைக்குக் கொண்டு சென்றதோடு, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்குக் குறித்த காலத்தில் விண்ணப்பிக்காமல் அலட்சியமாக இருந்தது திமுக அரசு.

மாணவர்கள் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைப்பதா?

திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, தமிழக மாணவர்கள் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைக்க முயற்சி செய்கிறது திமுக என்பதை, முதலமைச்சரால் மறுக்க முடியுமா?

நீட் தேர்வு மட்டுமல்ல, எந்தத் தேர்வானாலும் நமது மாணவர்கள் சாதனை படைக்கும் திறமை வாய்ந்தவர்கள். ஆண்டுதோறும் நீட் தேர்ச்சி விகிதமே இதற்கு சாட்சி.

போதும் முதலமைச்சரே…  நீட் எதிர்ப்பு என்ற பெயரில், நீங்கள் ஆடும் சுயநல நாடகம். எனவே, இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள்’’.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
Rinku Singh Wedding: திருமண தேதியை அறிவித்த ரிங்கு சிங் - பிரியா சரோஜை எங்கு? எப்போது? கரம்பிடிக்கிறார்..
Rinku Singh Wedding: திருமண தேதியை அறிவித்த ரிங்கு சிங் - பிரியா சரோஜை எங்கு? எப்போது? கரம்பிடிக்கிறார்..
M. Dhanapal Profile: கவுன்சிலருக்கு அடித்த ஜாக்பாட்.. எம்.பி சீட் கொடுத்த இபிஎஸ்.. யார் இந்த தனபால் ?
கவுன்சிலருக்கு அடித்த ஜாக்பாட்.. எம்.பி சீட் கொடுத்த இபிஎஸ்.. யார் இந்த தனபால் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
Rinku Singh Wedding: திருமண தேதியை அறிவித்த ரிங்கு சிங் - பிரியா சரோஜை எங்கு? எப்போது? கரம்பிடிக்கிறார்..
Rinku Singh Wedding: திருமண தேதியை அறிவித்த ரிங்கு சிங் - பிரியா சரோஜை எங்கு? எப்போது? கரம்பிடிக்கிறார்..
M. Dhanapal Profile: கவுன்சிலருக்கு அடித்த ஜாக்பாட்.. எம்.பி சீட் கொடுத்த இபிஎஸ்.. யார் இந்த தனபால் ?
கவுன்சிலருக்கு அடித்த ஜாக்பாட்.. எம்.பி சீட் கொடுத்த இபிஎஸ்.. யார் இந்த தனபால் ?
Tata Punch Facelift: பெரிய டச்ஸ்க்ரீன், பிஜிடல் செண்டர் கன்சோல் - ஃபேலிஃப்டில் மிரட்டும் டாடா பஞ்ச் - EV டச்
Tata Punch Facelift: பெரிய டச்ஸ்க்ரீன், பிஜிடல் செண்டர் கன்சோல் - ஃபேலிஃப்டில் மிரட்டும் டாடா பஞ்ச் - EV டச்
இறப்பிலும் இணைப்பிரியா கணவன், மனைவி - மயிலாடுதுறையில் சோகம்
இறப்பிலும் இணைப்பிரியா கணவன், மனைவி - மயிலாடுதுறையில் சோகம்
50 வகையில் கமகம விருந்து.. மதுரை தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் சைவம், அசைவம் உணவுகள் தூள் !
50 வகையில் கமகம விருந்து.. மதுரை தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் சைவம், அசைவம் உணவுகள் தூள் !
அண்ணன் அழகிரி வீட்டுக்கு சென்றுவந்த முதல்வர், கவனம் ஈர்த்தது என்ன...? முழு விபரம் இதோ !
அண்ணன் அழகிரி வீட்டுக்கு சென்றுவந்த முதல்வர், கவனம் ஈர்த்தது என்ன...? முழு விபரம் இதோ !
Embed widget