மேலும் அறிய

Actor Surya: சாதி மதத்தை கடந்தது கல்வி மட்டுமே, வீண் பழி சொன்னால் கண்டுக்க வேண்டாம் - நடிகர் சூர்யா அட்வைஸ்

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சாதி, மத்தை மாற்றுவது கல்விதான் என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

சமூகத்தில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் சாதி மதத்தை கடந்தது கல்வி மட்டுமே என நடிகர் சூர்யா கூறியுள்ளார். 

சென்னை சாலி கிராமத்தில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் நடிகர் சூர்யா, அவரது தம்பியான கார்த்தி மற்றும் தந்தை சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அகரம் மூலம் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டிய சூர்யா, அகரத்தின் இளம் தலைமுறையினரை பாராட்டினார். கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசுடன் இணைந்து அகரம் செயல்படுவதால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி வழங்க முடிவதாக தெரிவித்தார். அகரம் மூலம் படித்து சமூகத்தில் பணிக்கு செல்லும் மாணவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் அதிகளவில் தன்னம்பிக்கை இருப்பதாக கூறிய சூர்யா, அகரம் மாணவர்களையே சில கல்லூரிகள் விரும்புவதாக குறிப்பிட்டார்.

40 வயதில்தான் தனக்கு பெண்கள் மீதான புரிதல் ஏற்பட்டுள்ளது என்ற சூர்யா,  அகரம் அறக்கட்டளையில் படித்து வெளியேறும் இளம் தலைமுறையினருக்கு பெண்களை உணர்ந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் அளவுக்கு புரிதல் இருப்பதாக கூறி நெகிழ்ந்தார்.  தொடர்ந்து பேசிய சூர்யா, “கல்வி மூலமாக மட்டுமே வீட்டையும், சமுதாயத்தையும் மாற்ற முடியும். கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள். வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள். சமூகத்தில் ஏராளமான ஏற்ற தாழ்வுகள் உள்ளன. சாதி, மதத்தை கடந்தது கல்வி மட்டுமே. தொழிலுக்கும், வாழ்க்கைக்கும் கற்று தருவதே கல்விதான்.  மார்க் மட்டுமே வாழ்க்கை இல்லை. இளம் தலைமுறையை சரியான பாதையில் வழிநடத்துவதால் அரசுப்பள்ளி ஆசிரியர்களை தலை வணங்குகிறேன்” என்றார் 

இறுதியாக, “யாரோ ஒருத்தர் வீண் சொல்லோ அல்லது பழி சொல்லோ பேசிவிட்டால் அதற்காக முழு நாளை வீணாக்க முடியாது. அதேபோல்தான், ஒரு நாளையின் தொடக்கம் நல்ல காரியங்களில் இருந்து தொடங்க வேண்டும். நெகட்டிங் எண்ணங்களை விட்டு வாழ்வின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார். 

2006ம் ஆண்டு சூர்யா தொடங்கிய அகரம் அறக்கட்டளை ஆண்டு தோறும் ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பள்ளி படிப்பை தருவதுடன், மருத்துவர், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் வரை படிக்க வைத்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்று தருகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சியத்தில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்காக பாராட்டு விழா நடைபெறும். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், வெற்றிப்பெற்ற மாணவர்களை பாராட்டி சூர்யா சான்றிதழ்களை வழங்கினார். 

முன்னதாக, விழாவில் பேசிய கார்த்தி, கல்வி இருந்தால் போதும் ஒரு தலைமுறையே முன்னேறும் என்றதுடன், அதற்கு உதாரணம் அகரம் அறக்கட்டளையில் சாதித்து காட்டிய மாணவ, மாணவிகள் தான் என்றார். 

தலைப்பு செய்திகள்

PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget