மேலும் அறிய

தனுஷ் பட பாணியில் கால்நடை மருத்துவர் கடத்தல்.. துப்பாக்கி முனையில் திருமணம்!

பீகாரின் பெகுசாராய் பகுதியில் கால்நடை மருத்துவர் ஒருவர் நோயால் பாதிக்கப்பட்ட விலங்கைப் பரிசோதிக்குமாறு அழைக்கப்பட்டு, மூவர் குழுவால் கடத்தப்பட்டு, பலவந்தப்படுத்து திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர்கள் தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலி கான் முதலானோர் நடித்திருந்த `கலாட்டா கல்யாணம்’ படத்தின் பாணியில், பீகார் மாநிலத்தில் ஒருவரைக் கடத்தி, அவரது விருப்பமின்றி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

பீகார் மாநிலத்தின் பெகுசாராய் பகுதியில் கால்நடை மருத்துவர் ஒருவர் நோயால் பாதிக்கப்பட்ட விலங்கைப் பரிசோதிக்குமாறு அழைக்கப்பட்டு, மூவர் குழுவால் கடத்தப்பட்டு, பலவந்தப்படுத்து திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட கால்நடை மருத்துவரின் உறவினர் ஒருவர் இதுகுறித்து பேசிய போது, `நள்ளிரவு 12 மணிக்கு நோயால் பாதிக்கப்பட்ட விலங்கைப் பரிசோதிக்குமாறு அழைப்பு வந்த போது, அவர் கிளம்பினார்.. அப்போது அவரை மூவர் கடத்திச் சென்றனர். வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சியடைந்து காவல்துறையிடம் புகார் அளிக்கச் சென்றோம்’ எனக் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட கால்நடை மருத்துவரின் தந்தை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தனுஷ் பட பாணியில் கால்நடை மருத்துவர் கடத்தல்.. துப்பாக்கி முனையில் திருமணம்!

`பாதிக்கப்பட்ட நபரின் தந்தை காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் வழங்கியுள்ளார். காவல்துறை அதிகாரிகளிடம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கான உத்தரவிட்டுள்ளோம். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என பெகுசாராய் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமார் தெரிவித்துள்ளார். 

பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் முதலான மாநிலங்களில் இதுபோல மணமகன்களைக் கடத்தி வருவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. போதிய நிதி வசதியும் சமூகப் பாதுகாப்பும் கொண்ட திருமணமாகாத இளைஞர்களை மணப்பெண் குடும்பங்கள் துப்பாக்கி முனையில் கடத்தி வற்புறுத்தி திருமணம் செய்து வைப்பது அப்பகுதிகளில் பலராலும் நடத்தப்படுகிறது. 

கடந்த ஆண்டு, பீகாரில் இதே போன்ற நிகழ்வு ஒன்றில் பொறியியலாளர் ஒருவர் சிக்கிக் கொண்டது தேசிய அளவில் கவனம் பெற்றது. பொகோரோ இரும்புத் தொழிற்சாலையில் இளநிலை மேலாளராகப் பணியாற்றிய 29 வயது இளைஞர் வினோத் குமார் பாட்னாவின் பண்டாரக் பகுதியில் அடித்து, வற்புறுத்தி பெண் ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். மணமகனாக உடை அணிவிக்கப்பட்டு, திருமணம் வேண்டாம் என வினோத் குமார் அழும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதன் அடிப்படையில் நடிகர்கள் தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலி கான் முதலானோர் நடித்திருந்த `கலாட்டா கல்யாணம்’ படம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Embed widget