மேலும் அறிய

வடிவேல் காமெடி பாணியில் சேலத்தில் புல்லட் உடன் எஸ்கேப் ஆன காதல் ஜோடி கைது.. வீடியோ..

தேடப்பட்டு வந்த இருவரும் பெங்களூரை அடுத்த கோலார் மாவட்டத்தில் வாகன திருட்டில் ஈடுபட்ட போது கோலார் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம் பாலாஜி என்பவருக்கு சொந்தமான, பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் கன்சல்டிங் உள்ளது. இந்த கன்சல்டிங் கடைக்கு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி  இரண்டு இளம் ஜோடியினர் வந்துள்ளனர். ஒரு புல்லட் ஒன்று வாங்க வந்திருப்பதாக கூறி, அங்கிருந்த விலை உயர்ந்த டுவீலர்களை அவர்கள் சிறிது நேரம் பார்வையிட்டுள்ளனர்.

வடிவேல் காமெடி பாணியில் சேலத்தில் புல்லட் உடன் எஸ்கேப் ஆன காதல் ஜோடி கைது.. வீடியோ..

இதில் 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டுவீலரை தேர்வு செய்துள்ளனர் . பின்னர் வண்டியை, ஓட்டிப்பார்த்து விட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். கடை ஊழியர்களும், இன்னொரு ஜோடி இருக்கிறதே என்ற எண்ணத்தில் நம்பி வண்டியை எடுத்துப்போக அனுமதித்துள்ளனர் . நீண்ட நேரம் ஆகியும் வண்டியை எடுத்து கொண்டு ஜோடியாக சென்றவர்கள் மீண்டும் திரும்ப வில்லை. திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஓட்டிப்பார்த்து விட்டு வாங்கிக் கொள்வதாக கூறி டூவிலர் மற்றும் ஆட்டோவுடன் எஸ்கேப் ஆவார்.

அதே பாணியில் இந்த ஜோடியும் எஸ்கேப் ஆகி விட்டனர். நீண்ட நேரம் ஆன நிலையில் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் , இன்னொரு ஜோடியிடம் அவர்களை தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாது என்றும் நாங்கள் தனியாக வந்துள்ளோம் என்றும் கூறியுள்ளனர் .

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கடை உரிமையாளர் ராம் பாலாஜிக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் பதிவான காட்சிகளை பார்த்து, இரண்டு ஜோடிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த ஊழியர்கள், கடையில் இருந்த இன்னொரு ஜோடியை பிடித்து டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரித்தபோது, வண்டியில் சென்ற பெண்ணை மட்டும் எங்களுக்கு தெரியும் என பிடிபட்ட ஜோடி கூறியுள்ளனர்.

அதன் பேரில் தகவல் தெரிவிக்கப்பட்டு, வண்டியில் சென்ற பெண்ணின் உறவினர்கள் டவுன் குற்றப்பிரிவுக்கு வந்தனர். காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் வண்டியை ஓட்டிச்சென்ற வாலிபர் கிருஷ்ணகிரி அருகில் உள்ள குப்பத்தை சேர்ந்த பிரவின் குமார் என்பது தெரியவந்துள்ளது. வண்டியில் சென்ற பெண் அவரை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் சேலம் டவுன் குற்றப் பிரிவு போலீசார், வண்டியை எடுத்துச் சென்ற காதல் ஜோடியை தேடி வந்தனர்.

தலைமறைவாக இருந்த இருவரும் பெங்களூரில் இருப்பதாக கடந்த மார்ச் மாதம் தகவல் வந்த நிலையில் சேலம் டவுன் காவல்துறையினர் தனிப்படை அமைத்து பெங்களூர் சென்றனர். தேடப்பட்டு வந்த இருவரும் பெங்களூரை அடுத்த கோலார் மாவட்டத்தில் வாகன திருட்டில் ஈடுபட்ட போது கோலார் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து விசாரணையில் இவர்கள் இருவரும் இணைந்து பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தகவலறிந்து கோலார் சென்ற சேலம் டவுன் காவல்துறையினர் காதல் ஜோடியை கைது செய்து சேலம் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். 

தலைப்பு செய்திகள்

ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget