மேலும் அறிய

Crime: துப்பாக்கியுடன் நகை கடைக்குள்.. வெஃப் சீரிஸ் பார்த்து திருட சென்ற 3 சிறுவர்கள்.. கைது செய்த போலீஸ்!

பிரபலமான வெஃப் சீரிஸால் ஈர்க்கப்பட்ட மூன்று சிறுவர்கள், உத்தரபிரதேசம் மைடோனில் உள்ள நகைக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலமான வெஃப் சீரிஸால் ஈர்க்கப்பட்ட மூன்று சிறுவர்கள், உத்தரபிரதேசம் மைடோனில் உள்ள நகைக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது மே 30 ம் தேதி நடந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தற்போது கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

உத்தரபிரதேசம் மாநிலம் மதியோனில் வசிக்கும் ஹர்ஷ் மகேஸ்வரி என்பவர் அந்த பகுதியில் நகை கடை ஒன்றை வைத்துள்ளார். கடந்த 30ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மைனர் இளைஞர்கள் திடீரென நகை கடைக்குள் புகுந்து கதவை அடைத்துள்ளனர். மேலும், தங்களிடம் இருந்த கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டி, கடையில் இருக்கும் அனைத்து நகைகளையும் தங்களிடம் தருமாறு தெரிவித்துள்ளனர். மேலும், அவ்வாறு தரவில்லை என்றால் உன்னை துப்பாக்கியால் சுட்டு நகைகளை எடுக்கவும் தயார் எனவும் எச்சரித்துள்ளனர்.

அப்போது, கடை உரிமையாளர் ஹர்ஷ் தனது காலுக்கு அடியில் இருந்த அலாரத்தை ஆன் செய்துள்ளார். இதனால் அலாரம் ஒளி  எழுப்பவே பதற்றமடைந்த மூவரும், வந்த வழியே பயந்து தப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து, கடை உரிமையாளர் ஹர்ஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

போலீஸ் தரப்பில் என்ன கூறப்பட்டது? 

விசாரணைக்கு தலைமை தாங்கிய அலிகஞ்ச் காவல் உதவி ஆணையர் அசுதோஷ் குமார் இதுகுறித்து தெரிவிக்கையில், “ இந்த வழக்கின் விசாரணையின்போது, ஹர்ஷின் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி இருந்து குற்றவாளிகளின் புகைப்படங்களை பெற்றோம். பின்னர், இவர்கள் யாரென்று அனைத்து காவல்துறையின் தகவல் அளிக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டோம். இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை மூவர் குறித்த தகவல் கிடைத்தது. 

அதன்பிறகு மூவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன. தீவு போன்ற வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடவும், அதிக பணம் கிடைக்கவும் இந்த திட்டத்தை தீட்டினோம். ஆனால், அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்ததாக அந்த மூவரும் தெரிவித்தனர்.” என்று கூறினார். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் எங்கிருந்து எப்படி ஆயுதங்களை வாங்கினார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றன. 

திருட்டு சம்பத்தில் ஈடுபட்ட மூவரும் 15,16 மற்றும் 18 வயதுடைய மைனர்கள். மேலும், இவர்கள் 8-ஆம் வகுப்புடன் இடைநின்றவர்கள். வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி தினந்தோறும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget