மேலும் அறிய

Crime: இப்படியா அடிப்பாங்க!? இரும்பு பைப்பால் மாணவனை தாக்கிய ஆசிரியர்!

கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவின் புறநகர் பகுதியான யெலஹங்காவில் ஆசிரியர் மாணவரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

பெங்களூருவில் 10 ஆம் வகுப்பு மாணவனை இரும்பு பைப்பால் ஆசிரியர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆசிரியர்- மாணவர் இடையேயான உறவு எவ்வளவு உன்னதமானது, கற்றுக்கொடுக்கும் குரு, கற்றுக்கொள்ளும் சிஷ்யன் என  அந்த பந்தந்தை எவ்வளவு விவரித்தாலும் வாழ்க்கையில் அத்தகைய நினைவுகள் மறக்க முடியாதது. ஆனால் சில இடங்களில் முரட்டுத்தனமான நடந்து கொள்ளும் மாணவர்கள், ஆசிரியர்களால் ஒட்டுமொத்தமாக இவர்கள் என்றாலே இப்படித்தான் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இதனைத் தடுக்க அரசு எவ்வளவு விழிப்புணர்வு, நடவடிக்கைகள் எடுத்தாலும் ஆங்காங்கே குற்றங்கள் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவின் புறநகர் பகுதியான யெலஹங்காவில் ஆசிரியர் மாணவரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள டியூஷன் சென்டர் ஒன்றில் 35 வயது ஆசிரியர் விஜய்குமார் 10 ஆம் வகுப்பு மாணவனை இரும்பு பைப்பால் கொடூரமாக தாக்கியதாக கைது செய்யப்பட்டார். போலீசார் அளித்த தகவலின்படி, கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் விஜய்குமார் மாணவரை தாக்கியதில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு சென்றதும் தனது அம்மாவிடம் மாணவர் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து போலீசிடம் புகாரளித்த மாணவரின் தாய், மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட காயம் குறித்து தெரிவிக்காமல் இரவு 8.30 மணி வரை டியூஷனிலேயே வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஆசிரியர் விஜயகுமார் மீதுஐபிசி 324 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து போலீசார் தங்கள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.

ஆனால் மாணவரை தாக்கிய குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆசிரியர் விஜய்குமார், டியூஷன் முடிந்து சாயங்காலம் ஐந்து மணிக்கு வீட்டுக்குப் போக வேண்டும், கோச்சிங் சென்டருக்கு வெளியே நிற்கக் கூடாது என்று சொன்னேன். ஆனால் சிலர் அதனைக் கண்டுக் கொள்ளாமல் டியூஷன் மையத்திற்கு வெளியே நடமாடுவதைக் காண முடிந்தது.  இங்கே என்ன செய்கிறீர்கள் என நான் கேட்டபோது ஆணவத்துடன் பதிலளித்தனர். அவர்களை மிரட்ட இரும்பு பைப்பை கையில் எடுத்தேன். ஆனால் நான் யாரையும் மிரட்டவில்லை என தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
மயிலாடுதுறை: தொடர் கஞ்சா விற்பனை - குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!
மயிலாடுதுறை: தொடர் கஞ்சா விற்பனை - குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Ration Shop Employees : கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
TN Government Employees : இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
ADMK EPS : ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
Embed widget